கொல்கத்தா அணிக்கு கிடைத்த இரண்டாவது ஆன்ட்ரே ரசல், 20 பந்துகளில் அரைசதம் விளாசிய ஷர்துல் தாக்கூர்.

ஐபிஎல் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கி பிரமாதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று 9வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இப்போ

By ·

ஐபிஎல் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கி பிரமாதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று 9வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச தீர்மானித்தது.

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக ஒரு போட்டி நடக்கும்போதெல்லாம், ஏதாவது வித்தியாசமாக ஓன்று நடப்பதை நாம் பார்க்கிறோம். அதே நேரத்தில், RCBக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் ரசல் வித்தியாசமாக பேட்டிங் செய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். பெண்ககளூருக்கு எதிராக இதுவரை ரசல் மிகவும் பிரமாதமான ஆட்டத்தை கொடுத்திருக்கிறார்.

சொல்லப்போனால் ரசல் இதுவரை RCB க்கு எதிராக 39(19), 41(17), 15(11) மற்றும் 65(25) ரன்கள் எடுத்துள்ளார். என மிகவும் அற்புதமான சில ஆட்டங்களை ஆடியிருக்கிறார். இது ஈடன் கார்டனில் விளையாடிய இன்னிங்ஸ். இதுவரை ஈடன் கார்டன் மைதானத்தில் ஆர்சிபிக்கு எதிராக ஆன்ட்ரே ரசல் மொத்தம் 72 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடித்துள்ளார். ஆனால் இன்று நடந்த போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பூஜ்ஜிய ஸ்கோரில் பெவிலியன் திரும்பினார்

ஆனால் இன்றைய போட்டியில் ரசலை விட ஷர்துல் தாக்கூர் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். ஏனென்றால் கொல்கத்தா அணி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது ஷர்துல் தாக்கூர் 20 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதுமட்டுமில்லாமல் 28 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். ஆனால் அதற்கு பிறகு அவரது அதிரடி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் முஹமத் சிராஜ்.

ஆனால் ஷர்துல் தாக்கூரை ஆட்டமிழந்தாலும் கேகேஆர் அணிக்கு தேவையானதை செய்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இந்த இன்னிங்ஸைப் பார்த்த ரசிகர்கள் ஷர்துல் தாக்கூரை KKR இன் புதிய ரஸ்ஸல் என்று சமூக வலைதளங்களில் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை