பந்துகளை பறக்க விட்ட ஜெய்ஸ்வால், விக்கெட்டுகளை தெறிக்க விட்ட சாஹல் – அற்புதமான “ComeBack” கொடுத்த ராஜஸ்தான்.
ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 5 இடத்திலும் கொல்கத்தா அணி 6 இடத்திலும் இருந்து வருகிறது. இவ்விறு அணிகளும் புள்ளி பட்டியலில் ப்ளே
ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 5 இடத்திலும் கொல்கத்தா அணி 6 இடத்திலும் இருந்து வருகிறது. இவ்விறு அணிகளும் புள்ளி பட்டியலில் ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகிறது.டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு ரன்களை சேர்க்க திணறியே வந்தனர். ராய் 10 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேற, கூர்பாஸ் 18 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த அணியின் கேப்டன் ராணா அணிக்கு நம்பிக்கை சேர்ப்பார் என எதிர் பார்த்த நிலையில் அவரும் 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் வந்த ரசல் கடந்த போட்டியை போல் அதிரடியை காட்டி ரன்களை குவிப்பார் என எதிர் பார்த்த நிலையில் 10 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு வந்த வெங்கடேஷ் ஐயர் அணிக்கு நம்பிக்கையை சேர்த்தார். நிதானமாகவே விளையாடி 42 பந்துகளில் 52 ரன்களை எடுத்து இருந்த போது சஹல் சுழலில் சிக்கி வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் 1 ரன்களில் வெளியேற, அதிரடி மன்னன் ரின்கு சிங்கும் 16 ரன்களில் வெளியேற கொல்கத்தா அணி பெரும் தடுமாற்றத்தையே சந்தித்து வந்தனர்.நரேன் 6 ரன்களில் வெளியேற 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது
ராஜஸ்தான் பேட்டிங் :
இந்நிலையில் 150 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடியது. கொல்கத்தா மைதானத்தில் இந்த மெதுவான ஆடுகளத்தில், KKR இன் பேட்ஸ்மேன்களால் சிறப்பாக எதுவும் செய்ய முடியாத நிலையில், யசஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அனல் பறந்தது. அதற்கு விதை போட்டது நிதிஸ் ராணா. இவர் வீசிய ஓவரில் ஜெய்ஸ்வால் 26 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.
சூறாவளியாக சுழன்று அடித்த ஜெய்ஸ்வால் :
இதையடுத்து அவர் அதிரடியாக பேட்டிங் செய்யத் தொடங்கினார். இருப்பினும், ஜோஸ் பட்லர் வடிவத்தில் ராஜஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்தது, ஆனால் ஜெய்ஸ்வாலின் அதிரடி பேட்டிங்கினால் கொல்கத்தா அணியன் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஜருடன்ஹார். மேலும் இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் வெற்றி பெற்றது.