காலில் ஏற்பட்ட காயம், வலியால் துடித்த கேஎல் ராகுல். நடந்தது என்ன? வீடியோ உள்ளே.

ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களுக்கு கெட்ட செய்தி ஒன்று வந்துள்ளது. போட்டியின் போது காயம் அடைந்த கேஎல் ராகு

By ·

ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களுக்கு கெட்ட செய்தி ஒன்று வந்துள்ளது. போட்டியின் போது காயம் அடைந்த கேஎல் ராகுல் வழியால் துடித்த நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டு பிளெசிஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் லக்னோ அணி பந்துவீச முடிவு செய்து பந்துவீசியது. அப்படியொரு நிலையில் தான் போட்டியின் 2வது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது 1.6 ஓவரின் போது மார்கஸ் ஸ்டோனிஸ் பந்துவீசினார். இந்நிலையில் ஃபாஃப் டு பிளெசிஸிடம் பந்தை வேகமாக கவர் டிரைவ் அடிக்க அது பவுண்டரியை நோக்கி விரைந்தது.

ஆனால் அந்த பந்தை கே.எல்.ராகுல் நிறுத்த முயற்சி செய்தார். அப்படி ஓடும் போதே திடீரென கால்களை பிடித்து கொண்ட கே எல் ராகுல் பவுண்டரியோ அருகே தடுக்கி விழுந்தார். அவர் இப்படி விழுவதைப் பார்த்த அவரது மனைவி அதியா ஷெட்டியின் முகம் அழுவது போல் ஆனது. கீழே விழுந்த ராகுல் எதிர்க்க முடியாமல் வழியால் துடித்தார். அதனை அவரது முகத்தில் பார்க்க முடிந்தது இதன் பிறகு கே.எல்.ராகுலால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை.

இதனால் அவரை மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டதாகக் காட்டப்பட்டது, ஆனால் பின்னர் அவர் மைதானத்தை நடந்தே வெளியேறினார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அடிபட்ட நிலையில் அவர் பேட்டிங் செய்ய வருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் இவரின் காயம் எந்த அளவிற்கு என்று இன்னும் சரியாக தெரியவில்லை.

ஒருவேளை KL ராகுலுக்கு காயம் தீவிரமாக இருந்தால் அது இந்தியாவின் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு மிகவும் மோசமான செய்தி, ஏனெனில் அவர் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். டீம் இந்தியா ஜூன் 7 முதல் 11 வரை ஓவலில் WTC இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா தனது அணியை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பிசிசிஐ டீம் இந்தியாவை அறிவித்துள்ளது அங்கு கேஎல் ராகுல் மற்றும் அஜிங்க்யா ரஹானே பெயர் உள்ளது.

இருந்தாலும் சில அனுபவம் வாய்த்த வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் கேஎல் ராகுலும் வெளியேறினால் அது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை