தன்னுடைய பிறந்தநாளில் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய கே.எல்.ராகுல் – புகைப்படங்கள் உள்ளே.
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது மருமகனும் கிரிக்கெட் வீரருமான கே.எல்.ராகுலின் பிறந்தநாளை இன்று ஏப்ரல் 18ஆம் தேதி கொண்டாடினார். அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுலின் திருமணத்திற்குப் பிறகு ராகுலின் முதல் பிறந்தநாள் இது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், இந்திய அணியின் நட்சத்திர பேட்
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது மருமகனும் கிரிக்கெட் வீரருமான கே.எல்.ராகுலின் பிறந்தநாளை இன்று ஏப்ரல் 18ஆம் தேதி கொண்டாடினார். அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுலின் திருமணத்திற்குப் பிறகு ராகுலின் முதல் பிறந்தநாள் இது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அவரது மாமனார் சுனில் ஷெட்டியும் சோசியல் மீடியாவில் புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், KL ராகுல், சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். விளையாட்டு உலகம் முதல் பாலிவுட் வரை இந்த திருமணம் பற்றி பேசப்பட்டது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் தான் திருமணத்திற்குப் பிறகு, அதியா தனது கணவரின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்,
தன்னுடைய மருமகனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சுனில் ரெட்டி சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவருடைய மருமகன் கே.எல்.ராகுலின் நெற்றியில் டிகா பூசுவதைக் நம்மால் காண முடியும். இந்த புகைப்படத்தை சுனில் ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனுடைய “எங்கள் வாழ்க்கையில் நீங்கள் இருப்பதை நாங்கள் பெருமை படுகிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாபா என்று பதிவிட்டிருந்தார்.
ஆதியா ஷெட்டியும் கேஎல் ராகுலும் 2019 ஆம் ஆண்டு நண்பர்களாக முதன்முதலில் சந்தித்தனர். அந்த சந்திப்புக்குப் பிறகு இருவருக்கும் இடையே உரையாடல் தொடங்கியது, பின்னர் இருவரும் ஒருவரையொருவர் டேட்டிங் செய்யத் தொடங்கினர், நான்கு ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு இருவரும் 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்யது கொண்டனர். இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில் நடைபெற்றது.
Pictures from bossman KL Rahul's 31st birthday celebration with his wife, last night ❤️#HappyBirthdayKLRahul pic.twitter.com/uxBQsbfHRj
— Juman Sarma (@cool_rahulfan) April 18, 2023
இருவரின் திருமணமும் அரச முறைப்படி நடந்து முடிந்தது. இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே வந்திருந்தனர். அந்த நேரத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து கொண்டிருந்ததால் இந்திய அணியில் பெரும்பாலானோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.