டைம் மெஷின் மட்டும் கிடைத்தால் இந்த விஷயத்தை தான் மாற்றுவேன் – கேஎல் ராகுல் பேச்சு.
இந்திய அணியில் கடந்த 20 ஆண்டுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டனர். குறிப்பிட தக்க வகையில் இந்தியா தஅணியில் சில பந்துவீச்சாளர்கள் முதல் இடத்தில் இருக்கின்றனர். மேலும் பேட்ஸ்மேன்களும் கூட சர்வதேச பட்டியலில் முதல் இடத்திற்கு வந்து செல்கின்ற்றனர். அந்த அளவிற்கு கிரிக்கெட் என்ப
இந்திய அணியில் கடந்த 20 ஆண்டுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டனர். குறிப்பிட தக்க வகையில் இந்தியா தஅணியில் சில பந்துவீச்சாளர்கள் முதல் இடத்தில் இருக்கின்றனர். மேலும் பேட்ஸ்மேன்களும் கூட சர்வதேச பட்டியலில் முதல் இடத்திற்கு வந்து செல்கின்ற்றனர். அந்த அளவிற்கு கிரிக்கெட் என்பது இந்தியாவில் வளர்ந்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரும் இந்த வளர்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் என்னதான் இந்திய சிறப்பாக கிரிக்கெட் விளையாடினாலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியால் இரு உலக கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்படும் இந்திய அணி நாக்கவுட் கட்டத்தில் மோசமாக விளையாடி தோல்வியை தழுவுகிறது. கடந்த உலக கோப்பை 2023 தொடரில் கூட இந்தியா ஆஸ்திரேலிய அணியிடம் தங்களது சொந்த நாட்டில் மோசமான தோல்வியை தழுவியது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கலந்த போட்டியில் விளையாட நிற்க போராடினார்கள். விராட் 54 ரன்களையும் ரோஹித் சர்மா 47 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்க கேஎல் ராகுல் நிலையாக நின்று 107 பந்துகளில் 66 ரன்களை அடித்திருந்தார். இருந்த போதிலும் அவர் பின்னர் ஆட்டமிழக்க இந்திய வெறும் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல். அதன் போது அஸ்வின் கேஎல் ராகுலிடம் : “ஒரு டைம் மெஷினை உங்களுக்கு வழங்க நான் அனுமதித்தால், அதன் மூலம் எதை மாற்ற முயற்சி செய்வீர்கள் என்று என அஸ்வின் கேள்வி கேட்டார். அதற்கு கேஎல் ராகுல் அனைவரும் ஆச்சரிய படும் பதில் ஒன்றை கூறினார்.
அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் நான் ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டேன். அதாவது ஸ்டார்க்கை எதிர்கொண்டு அடித்து விளையாடுவதா, அல்லது பொறுமையாக விளையாடுவதா என்று ஒரு சிக்கலான இடத்தில் மாட்டிக்கொண்டேன்.
ஒருவேளை நான் சரியாக விளையாடி அந்த போட்டியில் கடைசி வரையில் விலையாக இருந்திருதேன் என்றால் நான் இன்னும் இந்திய அணிக்காக 30 ரன்களை கூடுதலாக அடித்திருப்பேன். ஒருவேளை அதனால் உலக கோப்பையை கூட எங்களினால் வென்றிருக்க முடிந்திருக்கும், அந்த விஷியத்திற்காகத்தான் நான் அதிகமாக கவலைப்படுகிறேன் என்றார் கேஎல் ராகுல்.