கோலி, யுவராஜ் சிங் எல்லாம் கிடையாது. இந்த இந்திய வீரர்கள் தான் சிறந்த பீல்டர்கள் – வெங்கடேஷ் பிரசாத்.
கடந்த காலத்தில் இந்திய அணியை ஒப்பிடும் போது இந்திய அணி சமிப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் பீல்டிங் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து கொண்டே உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் முக்கிய பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது இந்திய அணி அது ப
கடந்த காலத்தில் இந்திய அணியை ஒப்பிடும் போது இந்திய அணி சமிப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் பீல்டிங் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து கொண்டே உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் முக்கிய பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது இந்திய அணி அது போல் யாரையும் நம்பி இருக்க வில்லை. அப்போது தான் இந்திய அணிக்கு முகமது கைப் யுவராஜ் சிங் என இருவர் வந்தனர்.
அவர்களுக்கு பிறகு தான் ஜடேஜா சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இணைந்தனர். அதன் பின் தான் இந்திய அணியின் தலை சிறந்த பீல்டராக விராட் கோலி அணியில் இணைந்து மேலும் இந்திய அணியின் பீல்டிங்கை மாற்றி அமைந்தனர். அதன் பின் இந்திய அணியின் பீல்டிங் சிறப்பாகவே அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் இந்த வீரர் தான் சிறந்த பீல்டர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கும் இல்லை விராட் கோலி இல்லை இவர்கள் தான் இந்திய அணியின் ஃபீல்டர் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத் பந்து வீச்சாளராக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றார். அவர் இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளையும் 161 ஒரு நாள் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
இந்திய அணியின் பீல்டிங் ஆனது நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு இருக்கின்றது மற்ற நாடுகளில் பீல்டிங் ஒப்பிடும் போது இந்திய அணியின் பில்டிங் சிறப்பாகவே இருந்து வருகிறது.இது குறித்து இந்திய அணியும் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில், அவரிடம் யார் என்று அணியின் சிறந்த பீல்டர் என்ற கேள்வி கேட்கப்பட்டது அப்போது அவர் அசாருதீன் சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய பெயர்களை மட்டுமே அவர் குறிப்பிட்டு பேசினார்.
இதில் முக்கிய பீல்டர்களான யுவராஜ் சிங் முகமது கைஃப் ,மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களின் பெயர் அதில் இடம்பிடிக்க வில்லை. வெங்கடேஷ் பிரசாத் கூறிய மூன்று பேரும் இந்திய அணிக்காக ஒருநாள் கோப்பையில் 2011ஆம் ஆண்டு கோப்பை வென்று கொடுத்த 3 நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் என்பதும் குறிப்பிட தக்கது.