அற்புதமான சதம் அடித்த பிறகு தனது மனைவிக்கு போன் செய்த கோலி. ரசிகர்கள் மனதை கவர்ந்த தருணம்.

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி பதிவு செய்த்தது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான

By ·

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி பதிவு செய்த்தது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போனால் முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத்.

ஒரு கட்டத்தில் ஹைதரபாத் 150 தண்டுவார்களா என்றிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய கிளாசனின் பேட்டிங்கினால் 150 ரன்களை தொட்டது ஹைதராபாத். மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளாசன் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் முலம் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் கிளாசன். ஆனால் சதம் அடித்த அந்த ஓவரிலேயே கிளாசன் 51 பந்துகளை 104 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது ஹைதராபாத் அணி.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆர்சிபியின் தொடக்க ஜோடியான விராட் கோலி மற்றும் டு பிளேசிஸ் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் ஃபாஃப் டு பிளிசிஸ் 71 ரன்கள் எடுத்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது வாழ்க்கையில் 76வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இறுதியில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் விதியசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலிலும் மும்பையை கீழே தள்ளி 4வது இடத்திற்கு வந்தது.

இந்நிலையில் தான் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் வீடியோ காலில் பேசினார். அது தொடர்பான புகைபடங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனுஷ்கா ஷர்மா ஒரு பாலிவுட் நடிகை,இவரை விராட் கோலி கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாமிக்க கோலி என்ற மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் ஐபிஎல் 2023ல் இதுவரை விராட் கோலி மிகவும் சிறப்பாக ஆடியுள்ளார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி, அதில் 135 ஸ்ட்ரைக் ரேட்டில் 538 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இந்த ஐபிஎல் சீசனில் கோலி இதுவரை 1 சதம் மற்றும் 6 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை