நான் இது வரை வீழ்த்திய விக்கெட்டில் விராட் கோலி விக்கெட் தான் மிகவும் எளிதானது – சர்ச்சையை ஏற்படுத்திய மிட்சல் ஜான்சன்.

ஆஸ்திரேலியா அணியின் வீரர் மிட்சல் ஜான்சன் தற்போது சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். விராட் கோலியின் விக்கெட்டை எளிதாக வீழ்த்தலாம் என்றும் அவர் கூறியிருந்தார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ஐ தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி தொடர் முழுவதும் சிறப்பாக செயல்

By ·

ஆஸ்திரேலியா அணியின் வீரர் மிட்சல் ஜான்சன் தற்போது சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். விராட் கோலியின் விக்கெட்டை எளிதாக வீழ்த்தலாம் என்றும் அவர் கூறியிருந்தார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ஐ தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு இருந்தது. உலககோப்பையில் அதிக ரன்களை அடித்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருந்து வந்தார். அவர் சில போட்டிகளில் தன்னுடைய தனிப்பட்ட சாதனயைக்காக விளையாடினார் அணிக்காக விளையாடவில்லை அவர் ஒரு சுயநலவாதி என்றும் பலர் அவரை விமர்சித்து இருந்தனர்.

இந்த 2023 உலகக் கோப்பையில் விராட் கோலி ஒரு சாதனை படைத்தார். அவர் விளையாடிய 11 இன்னிங்ஸில் 95.62 சராசரி மற்றும் 90.32 ஸ்ட்ரைக் ரேட்டில் 765 ரன்களை அவர் எடுத்து இருந்தார் உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் 700 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த சாதனை சச்சின் டெண்டுல்கரின் (2003ல் 673 ரன்கள்) சாதனையை அவர் முறியடித்து உள்ளார். அது மட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் முறியடித்து இருந்தார்.

மிட்சல் ஜான்சன் ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஐவரும் ஒருவராக இருந்து வருகிறார். அவர் ஆஸ்திரேலியா அணியில் 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியில் சேர்ந்தார். ஆஸ்திரேலியா அணி சில போட்டிகளில் குறைவான ரன்களை அடித்து இருந்தாலும் இவரின் அற்புதமான பந்துவீச்சின் மூலம் அந்த போட்டியை எளிதாக வெற்றி பெறுவார். இவர் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஒரு பவுலர் ஆவார். ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை 2017, 2005 மற்றும் 2006 இல் ஆஸ்திரேலியா அணியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அவர் தற்போது விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது எளிதான காரியம். நான் வலது கை கால் பந்துவீசினால் கூட அவர் விக்கெட்டை எடுத்து விடுவேன் என்று கூறியிருக்கின்றார் இது குறித்து அவர் கூறுகையில். விராட் கோலி தான் நான் எடுத்து விக்கெட்டுகளில் எனக்கு எளிதான விக்கெட். மேலும் நான் வாழ்வில் ஒய்வுக்கு பிறகு இருந்து திரும்ப வந்து வலது கையில் பந்து வீசினால் கூட என்னால் இந்தியா அணியின் முன்னாள் கேப்டனை என்னால் வீழ்த்த முடியும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் பேசியிருக்கிறார்.

இது தற்பொழுது சர்ச்சையாகி கொண்டு வருகிறது. இதற்காக இந்திய ரசிகர்கள் மற்றும் விராட் கோலி ரசிகர்கள் ஆஸ்திரேலியா அணியும் பந்துவீச்சாளர் ஜான்சனை சமூக வலைத்தளங்களில் ட்ரால் செய்து வருகிறார்கள். மிட்சல் ஜான்சன் மற்றும் விராட் கோலி நேருக்கு நேர் மோதிக்கொண்ட 14 போட்டிகளில் மிட்சல் ஜான்சன் 14 போட்டிகளில் மட்டுமே அவரின் விக்கெட்டுகளை 4 முறை மட்டுமே வீழ்த்தி உள்ளனர். மிட்சல் ஜான்சன் அவ்வபோது சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகின்றார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை