எனக்கு 17வது ஓவரிலே என் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்துச்சி. எனக்கு அவர் மேல நம்பிக்கை இருந்துச்சி – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு
ஐபிஎல் 2024 என்னும் மாபெரும் திருவிழா மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்
ஐபிஎல் 2024 என்னும் மாபெரும் திருவிழா மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்ஸ் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தனர்.
அந்த நேரத்தில்தான் கொல்கத்தா அணியின் அதிரடி மன்னன் ரசல் ரிங்கு சிங்குடன் இணைந்து மாபெரும் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தா அணிக்கு ரன்களை குவித்தனர். இதில் ரசல் 25 பந்துகளில் 64 ரன்களை அடித்து இருந்தார். அதில் நாம் 3 பவுண்டர்களும் ஏழு சிக்ஸர்களும் அடித்திருந்தார். ஒரு கட்டத்தில் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்ந்து வந்த நிலையில் 150 ரன்களை எட்டுமா என்று சந்தேகம் இருந்த நிலையில் அதன் பின் ரசலின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 அவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை அடித்தது.
அதன் பின்னர் 208 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கமளித்தனர். இடையில் மிடில் ஆர்டரில் அவர்களால் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தனர். ஆனால் இருப்பினும் க்ளாசென் தனது திறமையான அபாரமான பேட்டிங்கால் 29 பந்துகளில் 63 ரன்கள் அடித்திருந்தார் அதில் ஒரு பவுண்டரி கூட கிடையாது எட்டு சித்தர்களை அடித்து இருந்தார்.
அவர் கடைசி ஒரு பந்தில் ஐந்து ரன்களை எடுத்தால் வெற்றி என்று நினைவில் அவர் அதற்கு முன்பாகவே ஆட்டம் இழந்து வெளியேறினார். புதிதாக வந்த கம்மின்ஸ் ரன் அடிக்க முடியாததால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது.நேற்றைய போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், 17வது ஓவரில் இருந்தே, என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் இருந்தன. கடைசி ஓவரில் எதுவும் நடக்கலாம் என்று உணர்ந்தேன்.
அவர்களுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது, எங்களிடம் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் இல்லை. ஆனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது, நான் அவரிடம் சொன்னேன், என்ன நடந்தாலும் பரவாயில்லை. அவர் உள்ளே வருவது சற்று பதட்டமாக இருந்தது, நான் அவரை கண்ணைப் பார்த்து ‘இது உங்கள் தருணம், நண்பா’ என்று சொன்னேன். விளையாட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று. ஆண்ட்ரே பேட் மற்றும் பந்தில் சிறப்பாக செயல்பட்டார், மேலும் சன்னி (நரேன்) கூட பந்தில் சிறப்பாக இருந்தார் என்றும் அவர் கூறினார்.