ஏலமோ 24.75 கோடி…எடுத்த விக்கெட்டோ 0… 2 போட்டி 100 ரன்களை வாரி வழங்கிய ஸ்டார்க். அதுக்கு இந்த 20 லட்சம் வீரரே பரவாயில்லை போலேயே. விமர்சிக்கும் ரசிகர்கள்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ம

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு கடந்த 9 ஆண்டுகளாக கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் மோதிய போது எல்லாப் போட்டுகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.


இந்த போட்டியில் பாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார். அது கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக அமைந்தாலும் போட்டி போக போக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் விராட் கோலிக்கு ரன்களை வாரி வழங்கி வந்தனர். பெங்களூர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை அடித்தது. அதில் அதிகபட்சமாக கிங் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை அவர் அடித்து இருந்தார்.

அதில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்சர்களையும் அவர் அடித்து இருந்தார். அதற்கு அடுத்தபடியாக கேமரூன் கிரீன் 21 பந்துகள் 33 ரண்களும் மேக்ஸ்வேல் 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்து இருந்தார்கள். கேப்டன் மற்றும் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பெங்களூரு அணி வீரர்களால் விராட் கோலிக்கு பிறகு ரன்களை குவிக்க முடியவில்லை. இறுதியாக கொல்கத்தா அணி 18.3 ஓவர்களிலே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சின்னசாமி மைதானத்தில் அவர்களது சாதனையை தக்கவைத்து கொண்டனர்.

அதாவது கடந்த 10 வருடங்களில் பெங்களூரு அணியை சின்ன சாமி மைதனத்தில் வீழ்த்தியுள்ளனர். இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் சுனில் நரைன் 47 ரன்களும் அடித்து இருந்தனர். கொல்கத்தா அணியின் சிறப்பான பேட்டிங்கால் வெற்றி பெற்றது. இதில் பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணம் மோசமான பௌலிங் மற்றும் மோசமான பீல்டிங்கும் தான் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

இதில் இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க்கு இந்த ஐபிஎல்லில் இது வரை நடந்த இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 100 ரன்களை அவர் கொடுத்துள்ளார். அவருக்கு கொல்கத்தா அணி 24.75 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்து இருந்தது. அதே போல் மற்றொரு பக்கம் ஹர்ஷத் ராணா இளம் வீரரை கொல்கத்தா அணி 20 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் எடுத்து இருந்தது. அவர் இது வரை விளையாடிய இரண்டு போட்டிகளில் 72 ரன்களை விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அனைத்து தரப்பினரும் அந்த இளம் வீரரை பாராட்டி வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை