இங்கிலாந்து அணி ஏன் இங்க இருக்காங்கனு தெரில. அவங்க இப்போவே பிளைட் பிடிச்சி போய்டலாம் – இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீ காந்த்.

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற

By ·

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற்றும் சிறப்பான பந்த்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.

அதில் இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருந்தது ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும் ஒரு காரணம் தான். அது மட்டுமல்லாமல் அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தது சர்ப்ராஸ் கானின் இரண்டு அரை சதமும் தான். சர்ப்ராஸ் கான்னுக்கு இது தான் இந்திய அணிக்கு அறிமுகப்போட்டி. அவர் பல காலமாக இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று அவர் போராடி கொண்டு இருந்தார். அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர்களால் பேஸ்பால் முறையில் விளையாட முடியவில்லை. அந்த அளவிற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டு இருந்தனர். இது குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீ காந்த் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், முடிந்தால், அடுத்த ஃப்ளைட் வீட்டுக்குப் பிடிக்கலாம். ஆனால், மீதி இரண்டு டெஸ்டிலும் விளையாட வேண்டும். இந்த பேஸ்பால் மற்றும் அதெல்லாம் அவர்கள் பரப்பிய கோட்பாடுகள் என்று நினைக்கிறேன்.

இது எங்கே வேலை செய்தது? ஆஷஸில் வேலை செய்ததா? வெளிப்படையாகச் சொன்னால். , அவர்கள் தொடர்ந்து விளையாடினால் எந்த உத்தியும் பலிக்காது. இந்த பேஸ்பால் கோட்பாட்டின் மீது அதிக பரபரப்பு நிலவியது. அந்த பேச்சையெல்லாம் ஆதரிக்க, அவர்களுக்கு இந்த சூழ்நிலையில் பேட்டிங் செய்யும் திறமை தேவை என்று நினைக்கிறேன். பந்து வீசும் திறமை உங்களுக்கு வேண்டும்” என்று ஸ்ரீகாந்த் கூறினார். என்று தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இது (பாஸ்பால்) நீண்ட காலத்திற்கு வேலை செய்யும் என்று நான் நினைக்கவில்லை. அங்கு சென்று ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சிக்கிறேன். நான் நினைக்கிறேன், பிரெண்டன் மெக்கல்லம் அப்படி பேட்டிங் செய்ய முடியும், பென் ஸ்டோக்ஸ் அப்படி பேட்டிங் செய்ய முடியும். எல்லோராலும் அதை செய்ய முடியாது. வெற்றிகரமாக, சில சமயங்களில், நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது… அது மிகைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். அது என் உணர்வு. நான் தவறாக இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை