ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இணைந்தது பும்ராவுக்கு பிடிக்கவில்லை – வெளிப்படையாக பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இணைந்தது பும்ராவுக்கு பிடிக்கவில்லை என்று முன்னாள் இந்திய அணியின் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். பும்ரா நேற்று தனது instagram பக்கத்தில் மௌனமே சிறந்த பதில் என்று அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தால் இதனை தொடர்ந்து ரசிகர்கள் பும்ர
ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இணைந்தது பும்ராவுக்கு பிடிக்கவில்லை என்று முன்னாள் இந்திய அணியின் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். பும்ரா நேற்று தனது instagram பக்கத்தில் மௌனமே சிறந்த பதில் என்று அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தால் இதனை தொடர்ந்து ரசிகர்கள் பும்ரா இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று பேச்சில் ஈடுபட்ட போது தான் இந்த விஷயம் வெளியே வந்தது. சில ரசிகர்கள் இந்திய அணி இறுதிப் போட்டி தோல்வி குறித்த அவர் பதிவேற்றி உள்ளார் என்று கூறி வந்தாலும் மற்ற சில ரசிகர்கள் அவர் மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா இணைந்தது பிடிக்காமல் தான் அவர் இவ்வாறு செய்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இதற்கான காரணம் என்னவென்றால் ஆராய்ந்து பார்த்தால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா சிறப்பாக இந்திய அணியை வழி நடத்தி இருந்தார். அப்போது இந்திய அணி வழி நடத்த பும்ரா தான் சரியான நபர் என்று பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை எனவே ஹர்திக் பாண்டியாவை விட பும்ரா தான் சிறந்த கேப்டன் என்று அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது.
எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவிற்கு பிறகு பும்ரா தான் கேப்டனாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் குஜராத் அணியில் இருந்து விலகி தற்போது மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்துள்ளார். அது பும்ராவுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் அடுத்த இருப்பார் என்றும் பல ரசிகர்கள் கூறிவரும் நிலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அவர் மும்பை அணியை instagram பக்கத்திலிருந்து பின் தொடர்வது நிறுத்திவிட்டார் என்றும் எம்எஸ் தோனியை பின்பற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே அவர் சென்னை அணியில் இணைய விரும்புகிறார் என்று ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை தற்பொழுது தெரிவித்து வருகின்றனர் இந்த விஷயமானது இணையத்தில் தற்போது தீயாய் பரவி வந்தது. இது குறித்து முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறுகையில்,
பும்ரா போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை வாழ் நாளில் கண்டுபிடிக்க முடியாது. அவர் எந்த வடிவத்தில் ஆன கிரிக்கெட் ஆக இருந்தாலும் அவர் சிறப்பாகவே செய்வார். இதை தற்போது நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் கூட நாம் அதை பார்த்து இருப்போம். பும்ரா ஏற்கனவே இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார். எனவே ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை அணியில் இணைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அது அவர் மனதை காயப்படுத்தி இருக்கலாம்.
அவர் மீண்டும் மும்பை அணிக்கு இணைந்தது மும்பை அணி கொண்டாடி வருவது அது கூட அவருக்கு காயமாக இருக்கலாம். தற்போது நடந்து வருவது அவருக்கு நியாயம் இல்லை என்றும் தோன்றி இருக்கலாம் என்றும் அவர் கூறினார். நான் குஜராத்தை சேர்ந்தவன் நானாவது குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கலாம் என்று என்றும் அவர் நினைத்து இருக்க வாய்ப்புள்ளது. பும்ரா மிகச் சிறந்த மனிதன். இதுபோன்ற ஏதாவது எனக்கு நடந்தால் நானும் காயப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.