ஐபிஎல் போட்டிக்கு முன்னர் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது – மும்மை அணியை வீழ்த்திய பிறகு க்ருனால் பாண்டியா கொடுத்த பேட்டி.

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களம் கண்ட லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மும்

By ·

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா  கிரிக்கெட் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களம் கண்ட லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தன.

ஆனால் க்ருனால் பாண்டியா நிதானமாகவே விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ருனால் பாண்டியாவும் ரிடேர்ட் அவுட் ஆக அற்புதமாக விளையாடிய ஸ்டானிஸ் அணிக்கு நன்றாக ஸ்கோரை உயர்த்தினர். ஸ்டானிஸ் மட்டுமே 47 பந்துகளில் 89 ரன்களை குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை கொடுத்தார். இறுதியில் 20 வது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது.

மும்பை இன்னிங்ஸ் :

178 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹிட் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் அணிக்கு அதிரடியான தொடக்கத்தையே குடுத்தனர். இருவரும் இணைந்து 90 ரனகளை குவித்த நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவருக்கு பின்னரே இஷான் கிஷன் 59 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். பெரிதும் எதிர் பக்கபட்ட சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறி அணிக்கு எமற்றையே கொடுத்தா

வதேரா 16 ரன்களிலும், விஷ்ணு வினோத் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேற மும்பை அணி தோல்வியை நோக்கி சென்றது.இருதியில் 20 வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்று ப்ளே ஆப்பிற்குள் செல்வதற்க்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.    

க்ருனால் பாண்டியா கூறியது :

எனக்கு காலில் தசை பிடிப்புகள் இருந்தன. நான் எப்போதுமே இரு அணியின் வீரர் தான். அணிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது. மொஹ்சின் பெரிய மனது கொண்டவர். வருக்கு சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை முடிந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு வந்தார்.

இந்த போட்டி எங்களுக்கு எழுமையாக இருக்கவில்லை. ஆனால் கடைசியில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக் இருக்கிறது. மேலும் எங்களுடைய மைதானத்தில் கடைசியாக ஆடும் போட்டி இது என்பதினால் அவர்களுக்கு வெற்றியை பெற்று தந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார் லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா..

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை