LSG தோல்விக்கு பிறகு கேப்டன் கேஎல்.ராகுல் காயம் குறித்து அப்டேட் கொடுத்த க்ருனால் பாண்டியா.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி சிறப்பான வெற்றியை பெற்றது. மேலும் அந்த போட்டியின் போது சில நிகழ்வுகளும் நடந்தது. குறிப்பாக போட்டியின் 2வது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது 1.6 ஓவரின் போது மார்கஸ் ஸ்டோனிஸ் பந்துவீசினார். இ

By ·

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி சிறப்பான வெற்றியை பெற்றது. மேலும் அந்த போட்டியின் போது சில நிகழ்வுகளும் நடந்தது. குறிப்பாக போட்டியின் 2வது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது 1.6 ஓவரின் போது மார்கஸ் ஸ்டோனிஸ் பந்துவீசினார். இந்நிலையில் ஃபாஃப் டு பிளெசிஸிடம் பந்தை வேகமாக கவர் டிரைவ் அடிக்க அது பவுண்டரியை நோக்கி விரைந்தது.

ஆனால் அந்த பந்தை கே.எல்.ராகுல் நிறுத்த முயற்சி செய்தார். அப்படி ஓடும் போதே திடீரென கால்களை பிடித்து கொண்ட கே எல் ராகுல் பவுண்டரியோ அருகே தடுக்கி விழுந்தார். கீழே விழுந்த ராகுல் எதிர்க்க முடியாமல் வழியால் துடித்தார். அதனை அவரது முகத்தில் பார்க்க முடிந்தது இதன் பிறகு கே.எல்.ராகுலால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. இதனால் அவரை மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டதாகக் காட்டப்பட்டது, ஆனால் பின்னர் அவர் மைதானத்தை நடந்தே வெளியேறினார்.

அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அடிபட்ட நிலையில் அவர் பேட்டிங் செய்ய வருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் இவரின் காயம் எந்த அளவிற்கு என்று இன்னும் சரியாக தெரியவில்லை. இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய க்ருனால் பாண்டியா கேஎல் ராகுலின் காயம் குறித்தது, லக்னோ அணியின் தோல்வி குறித்தும் பேசியிருக்கிறார்.

க்ருனால் பாண்டியா கூறியது :

அவர் கூறுகையில் “நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். எதிரணியை எங்களுடைய சிறப்பான பந்துவீச்சினால் வரும் 126 ரங்களுக்குள் கட்டுப்படுத்தினோம். இந்த போட்டியில் எங்களுடைய பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்ததாக களமிறங்கிய நாங்கள் 126 ரன்களை எடுத்திருக்கலாம். ஆனால் எங்களுடைய பேட்டிங் பந்துவீச்சை போல சிறப்பாக இல்லை. குறிப்பாக எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை என்றார் க்ருணால்.

அதற்கு பிறகு பேசிய க்ருணால் பாண்டியாவிடம் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் காயம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “கேஎல்ராகுலுக்கு இடுப்பில் தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரியவில்லை. மருத்துவர்கள் அதனை பற்றி அறிய முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

மோசமான செய்தி :

ஒருவேளை KL ராகுலுக்கு காயம் தீவிரமாக இருந்தால் அது இந்தியாவின் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு மிகவும் மோசமான செய்தி, ஏனெனில் அவர் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். டீம் இந்தியா ஜூன் 7 முதல் 11 வரை ஓவலில் WTC இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா தனது அணியை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பிசிசிஐ டீம் இந்தியாவை அறிவித்துள்ளது அங்கு கேஎல் ராகுல் மற்றும் அஜிங்க்யா ரஹானே பெயர் உள்ளது.

இருந்தாலும் சில அனுபவம் வாய்த்த வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் கேஎல் ராகுலும் வெளியேறினால் அது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை