நான் அப்படி சொல்லி இருக்க கூடாது என்னை மன்னித்துவிடுங்கள். விராட் கோலி விவகாரம் குறித்து மன்னிப்பு கோரிய குசல் மென்டிஸ்.
இலங்கை அணியின் கேப்டன் குசல் மென்டிஸ் தற்போது கூறுகையில் விராட் கோலி பற்றி பேசி இருக்கக் கூடாது என்னை மன்னித்து விடுங்கள் என்று இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வி
இலங்கை அணியின் கேப்டன் குசல் மென்டிஸ் தற்போது கூறுகையில் விராட் கோலி பற்றி பேசி இருக்கக் கூடாது என்னை மன்னித்து விடுங்கள் என்று இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த நிலையில் இந்திய அணி 326 ரன்களை குவித்து இருந்தது.
இதில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி தனது 49சதத்தை பதிவு செய்து இருந்தார். அதற்குப் பின் சில நாட்களுக்கு பின்னால் டெல்லியில் செய்தியாளர்களை குசல் மென்டிஸ் சந்தித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் நீங்கள் விராட் கோலியின் 49வது சதத்திற்கு அவரிடம் வாழ்த்த விருப்பம் இருக்கிறதா என்று அவரிடம் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பி இரிந்தார். அதற்கு கோபமுற்ற குசல் மென்டிஸ். அவரிடம் காட்டமான பதில் ஒன்றையும் அளித்து இருந்தார்.
பதில் அளித்த அந்த அவரை நான் அதற்கு விராட் கோலியை வாழ்த்த வேண்டும் என்றும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கேள்வியை எழுப்பி இருந்தார். இது மிகவும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் அந்த வீடியோவானது அப்போது இணையத்தில் பரவி வந்தது. அவர் கூறியது சரி என்றும் அவர் கூறியது தவறு என்றும் அவருக்கு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள இலங்கை அணியின கேப்டன் குசல் மென்டிஸ் கூறுகையில் விராட் கோலி 49 வது சதம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.
அந்த நேரத்தில் தான் செய்தியாளர்கள் ஒருவர் திடீரென வந்து அது போல கேள்வியை கேட்டார். எனக்கு அப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் அது போல நானும் அவரிடம் கேள்வியை எழுப்பி விட்டேன். ஒருநாள் கேட்டில் 49 சதங்களை அடிப்பது எல்லாம் சுலபமான காரியம் கிடையாது. நான் அப்போது கூறியது தவறு தான் அந்த தவறை நான் தற்போது தெரிவித்து வருத்தம் கொள்கிறேன் என்றும் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.