நாங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடியிருந்தால், முதல் நான்கு இடங்களுக்குள் நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். – குசல் மென்டிஸ்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 38 போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இலங்கை அணி புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திலும் பங்களாத
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 38 போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இலங்கை அணி புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திலும் பங்களாதேஷ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பது இடத்திலும் இருந்து வருகிறது. இதில் நேற்றைய இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டது.
ஆனால் அதை தவிர்த்து வேறு அணிகளுக்கும் பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் டிராபிக்கு தகுதி பெற வேண்டும் என்று இருக்கின்றது. அதற்கு இந்த புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பங்குபெறும் என்றும் விதி உள்ளது. ஆகையால் இவ்விரு அணிகளும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு நேற்றைய போட்டியில் கலந்து இறங்கினார். டாஸ் என்ற பங்களாதேஷ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
இலங்கை 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை குவித்து இருந்தது. அணியில் அதிகபட்சமாக அசலங்கா 108ரன்களையும் நிசாங்கா 41 ரன்களும் சதீரா 41ரன்களையும் குவித்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஷாகித் மூன்று விக்கெட்டுகளையும் ஹாசன் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மீராஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் விசித்திரமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டதற்காக ஏஞ்சிலோ மேத்யூஸ் அவர்களுக்கு நடுவரை விக்கெட் அளித்து இருந்தனர்.
250 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் ஏழு விக்கெட் களை இழந்து மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் எங்கள் இலங்கை அணி இடம் வெற்றியை கண்டது. பங்களாதேஷ் அணியின் அதிகபட்சமாக ஷிண்டோ 90 ரண்களும் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களும் லிட்டண்தாஸ் 23 ரன்களும் அடித்து இருந்தனர். எனவே பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது.
ஆகையால் இலங்கை அணி இடம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கை அணி அதிகபட்சமாக மதுஷங்கா மூன்று விக்கெட்டுகளையும் தீக்ஷனா மற்றும் மேத்யூஸ் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. தோல்வி குறித்து பேசிய குசல் மென்டிஸ்,
சரித் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார், ஆனால் நாங்கள் 30-40 ரன்கள் குறைவாக இருந்தோம்; இந்த விக்கெட்டில் 320 ரன்கள் எடுத்திருந்தால் போதுமானது. பாத்தும், சதீராவும், தில்ஷானும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் எங்களிடம் ஒரு நல்ல குழு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு இரண்டு காயங்கள் இருந்தன, அதனால்தான் எங்களிடம் பல மாற்றங்கள் மற்றும் புதியவர்கள் இருந்தனர்.
ஆனால் நாமும் தவறு செய்தோம்; நாங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடியிருந்தால், முதல் நான்கு இடங்களுக்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும். இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மேத்யூஸ் கிரீஸுக்கு வந்தபோது இன்னும் ஐந்து வினாடிகள் இருந்தன. வெளியே வந்து பார்த்தபோது ஹெல்மெட்டின் பட்டா இருப்பது தெரிந்தது. ஏமாற்றமாக இருந்தது. அவர் எங்களுக்காக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்த்தோம்; நடுவர்களால் தலையிட்டு நல்ல முடிவுகளை எடுக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது.”