வீடியோ : அற்புதமான கேட்ச்சை அசால்ட்டாக பிடித்து அசத்திய பௌலர் – அம்பயரே ஆச்சரியமடைந்த தருணம்
ஐபிஎல் தொடரின் 55வது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி சென்னை அணியின் தொடக்க அட்டகரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் டெல்லி அணியின் பௌலிங்கை கஷ்டபட்டு எத
ஐபிஎல் தொடரின் 55வது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி சென்னை அணியின் தொடக்க அட்டகரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் டெல்லி அணியின் பௌலிங்கை கஷ்டபட்டு எதிர்கொண்டு வந்தனர். கான்வே 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
THAT. WAS. STUNNING! 👌 👌
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
Relive that sensational catch from @LalitYadav03 👍 👍
Follow the match ▶️ https://t.co/soUtpXQjCX#TATAIPL | #CSKvDC | @DelhiCapitals pic.twitter.com/z15ZMq1Z6E
இந்நிலையில் சென்னை அணியின் சார்பில் களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தாலும் டெல்லியின் பந்துவீச்சுக்கு முன்னால் நிற்க முடியாமல் திணறினர். இந்நிலையில் விக்கெட்டுகள் விழுந்து இக்கட்டான நேரத்தில் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினார். அப்படி அவர் பேட்டிங் செய்யும் போதுதான் 12வது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது.
அதாவது 12 வது ஓவரில் லலித் யாதவ் பந்து வீசினார். ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே லலித் யாதவ் வீசிய பந்தை அடிக்க முயற்சி செய்து ஸ்டேட் டிரைவ் செய்ய முயன்றார் ரஹானே. ரஹானே ஷாட்டை நன்றாக அடித்தார் ஆனால் வேகமாக வந்த அந்த பந்தை லலித் யாதவ் அற்புதமான ஒரு கேட்சை பிடித்தார். அவரது கேட்சை கண்டு ரசிகர்கள் முதல் நடுவர்கள் வரை ஆச்சரியமடைந்தனர், தற்போது அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டியை பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் அதிரடியை காட்டத் தொடங்கிய ராய்டு மற்றும் டுபே இணைந்து ரன்களை குவித்து வந்தனர். 2 பந்துகளில் 25 ரன்களை அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் 117 ரன்களை எடுத்திருந்தது. ஆரம்பம் முதலே சென்னை அணியீன் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியே வந்த நிலையில் மஹேந்திர சிங் தோனி களமிறக்கிக்கி அதிரடி ஆட்டத்தினால் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்
20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 167 ரன்களை அடித்தது. இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய டெல்லி கேபிட்டன்ஸ் அணியால் இந்த ஸ்கோரை எடுக்க முடியாத நிலையில் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தோல்வியை தழுவியது டெல்லி. இதன் முலம் 90 சதவிகிதம் பிளே ஆஃப் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது சென்னை.