கடந்த வருடம் ஆர்சிபிக்கு வழிவகை செய்தோம், ஆனால் இந்த வருடம் – MI vs SRH போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா கொடுத்த பேட்டி.

ஐபிஎல் 2023 க்கான 69வது லீக்கில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணி அபாரமான வெற்றியை வேட்டை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில்டாஸ் வென

By ·

ஐபிஎல் 2023 க்கான 69வது லீக்கில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணி அபாரமான வெற்றியை வேட்டை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில்டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்த மும்பை தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசியது.

இருந்த போதிலும் சிறப்பாக் அவ்விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 200 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி. 201 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் இஷான் கிஷன் 14 ரன்களிலே வெளியேற மறுபுறம் அற்புதமாக விளையாடி வந்த க்ரீன் 20 பந்துகளிலே அவருடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் சர்மாவும் 31 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தார்.

13 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 148 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகில் சென்றது. ரோஹித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் க்ரீன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். க்ரீன் அற்புதமான ஆட்டத்தால் 100 பூர்த்தி செய்த நிலையில் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 201 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஹித் ஷர்மா கூறியது :

இந்நிலையில் இந்த அற்புதமான வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித் ஷர்மா கூறுகையில் “இந்த போட்டியில் வெளியே என்ன நடந்தாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனநிலையுடன் தான் நாங்கள் களத்திற்கு வந்தோம். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. போட்டிக்கு முன்னரே அனைத்து வீரர்களிடமும் இது குறித்து தான் பேசி இருந்தேன். கடந்த ஆண்டு நாங்கள் ஆர்சிபி அணி பிளே ஆப் செல்வதற்கு வழிவகை செய்து விட்டோம்.

ஆனால் இம்முறை முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். இந்த சீசனை நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை. அடுத்தடுத்து பல் தோல்விகளை சந்தித்தோம் ஆனாலும் அதற்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றது எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. பஞ்சாப் வுடனான போட்டியில் எங்களுக்கு 18 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் லக்னோ போட்டியின் போது முதல் இன்னிங் வரையில் போட்டி எங்களுடைய கையில் தான் இருந்தது.

ஆனால்’தோல்வியை தழுவினோம். அதற்கு பின்னர் தேவையான போட்டிகளில் எங்களுக்கு வெற்றியும் கிடைத்து தற்போது நல்ல நிலையில் உள்ளது மகிழ்ச்சி என ரோகித் சர்மா கூறினார். இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு விளையாடிய ஆர்சிபி அணி தோல்வியை தழுவிய நிலையில் மும்பை அணி அவரும் 24ஆம் தேதி லக்னோ அணியுடன் எலிமினேடர் சுற்றில் மோத இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை