பௌலர்களை பந்தாடிய ஜிதேஷ், சிக்ஸர்களை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன் – வரலாற்று சாதனை புரிந்த பஞ்சாப்.
ஐபிஎல் 2023 தொடரின் 46 வது போட்டி தற்போது நடந்து வருகிறது இப்போது பஞ்சாப் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிவருகின்றனர். இந்த போட்டியானது பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் மோதியபோது பெரிய கோரை சே
ஐபிஎல் 2023 தொடரின் 46 வது போட்டி தற்போது நடந்து வருகிறது இப்போது பஞ்சாப் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிவருகின்றனர். இந்த போட்டியானது பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் மோதியபோது பெரிய கோரை சேஸ் செய்வது அது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் பதிவு செய்ய மும்பை அணி சிறப்பாக பந்துவீசி பிரப்சிம்ரன் விக்கெட்டை வீழ்த்தினார். இருந்தபோதிலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் மேத்யூஸ் பொறுமையாக ஆடி சிறப்பான தொடக்கத்தை பஞ்சாப் அணிக்கு கொடுத்தனர்
ஆனால் எட்டாவது ஓவரில் சாவ்லா போட்ட சுழல் பந்தில் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டம் இருந்தார். சில ஓவர்கள் கடந்து மேத்யூஸ் அவருக்குப் பிறகு வந்த ஜிதேஷ் ஷர்மா மற்றும் லிவிங்ஸ்டன் மஇருவரும் இணைந்து சிறப்பான விளையாட்டை விளையாடினர். கிட்டத்தட்ட எல்லா ஓவர்களிலும் ரன்கள் குவித்த லிவ்விஸ்டன் 17வது ஓவரின் போது 32 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
FIFTY & going strong 🔥🔥
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
This has been an entertaining innings from the @PunjabKingsIPL batter 👌🏻👌🏻
Can he finish on a high note?
Follow the match ▶️ https://t.co/QDEf6eqX22 #TATAIPL | #PBKSvMI pic.twitter.com/7taq5q5I67
மேலும் ஜோப்ரா ஆர்சர்19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸ்களை அடித்தார் லிவிங் ஸ்டைல் அதற்குப் பிறகு ஆட்டமே மாறியது கிட்டத்தட்ட 10 ஓவர்கள் முடியும் போது 78 ரங்களுக்கு இரண்டு விக்கெட் என்று இருந்த நிலையில் அதற்கு பிறகு ஆட்டம் சூடு பிடித்தது. லிவிங்ஸ்டன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 214 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார்.
What a finish 🤩
— Punjab Kings (@PunjabKingsIPL) May 3, 2023
Time for the bowlers to put on a show 💪#PBKSvMI #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/RHhLl7Lirv
மேலும் தொடர்ந்து 4 போட்டிகளில் ஐபிஎல்லில் 200+ ரன்கள் அடித்த அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதுவரையில் கொல்கத்தா அணி 2023ல் 3 தொடர் 200+ ரன்கள் அடித்தது முந்திய சாதனையாக இருந்த நிலத்தில் பஞ்சாப் அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அதாவது மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.
சொல்லப்போனால் கடந்த சில போட்டிகளாக ரோகித் சர்மா எந்த பெரிய ஸ்கோர்களையும் அடிக்காத நிலையில் தற்போது மீண்டும் டக் அவுட் ஆகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படி இருக்கும் நிலையில் இவர் எப்படி உலகக் கோப்பையை வென்று தரப் போகிறார் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் விமரிசித்து வருகின்றனர். ஏனெற்றால் இந்த ஐபிஎல் சீசனில் ஒரு பேட்ஸ்மேனாக எந்த பெரிய ஆட்டத்தையும் நம்மால் ரோஹித் ஷாவிடம் பார்க்க முடியவில்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக உள்ளது.