சென்னை அணியில் தோனி போல் ரோஹித் ஷர்மா மும்பை அணியில். அந்த அளவிற்கு அவர் உழைத்து உள்ளார் – இர்பான் பதான்.
சென்னை அணியில் தோனி எப்படியோ அதே போல் தான் ரோஹித் ஷர்மாவும் மும்பை அணியில் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த
சென்னை அணியில் தோனி எப்படியோ அதே போல் தான் ரோஹித் ஷர்மாவும் மும்பை அணியில் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள்.
இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது.
இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது.
அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், “சிஎஸ்கேயில் எம்எஸ் தோனிக்கு என்ன அந்தஸ்து இருக்கிறதோ அதே அளவுதான் ரோஹித் சர்மாவுக்கும் இருக்கிறது. ரோஹித் ஒரு கேப்டனாக தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் அணியைக் கட்டமைத்துள்ளார். அவர் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார் மற்றும் பெரும்பாலும் குழு கூட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
அவர் ஒரு விதிவிலக்கான கேப்டனாக இருந்திருக்கிறார், நான் அவரை ஒரு பந்துவீச்சாளர் கேப்டன் என்று கூறுவேன். கடந்த ஆண்டு அவருக்கு நன்றாக இல்லை என்பதில் சந்தேகமில்லை. ஹர்திக் பாண்டியாவைப் பொறுத்தவரை, இந்திய அணியில் ஏற்கனவே சூர்யகுமார் மற்றும் பும்ரா ஆகியோர் கேப்டன்களாக இருந்தனர். இந்த ஸ்டேட்வார்ட்களை நிர்வகிப்பது அவருக்கு கடினமாக இருக்கும் மற்றும் நிர்வாகத்திற்கும் கடினமாக இருக்கும்” என்று இர்பான் பதான் கூறினார்.