சென்னை அணி தக்கவைத்த வீரர்களின் பட்டியல். அப்போ கப்பு சென்னை அணிக்கு தான்.
ஐபிஎல் 2024 க்கான ஏலம் ஆனது வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரரை தக்க வைத்துக் கொள்கிறது எந்தந்த அணி வீரர்களை விடுவிக்கிறது என்பது குறித்து பட்டியலை நவம்பர் 26 அதாவது இன்று BCCI இடம் அனுப்ப வேண்டும் என்றும் அதன் படி இன்று
ஐபிஎல் 2024 க்கான ஏலம் ஆனது வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரரை தக்க வைத்துக் கொள்கிறது எந்தந்த அணி வீரர்களை விடுவிக்கிறது என்பது குறித்து பட்டியலை நவம்பர் 26 அதாவது இன்று BCCI இடம் அனுப்ப வேண்டும் என்றும் அதன் படி இன்று அனைத்து அணிகளும் தங்கள் அணியின் வீரர்களை தக்க வைத்துக் கொள்வது அல்லது விடுவிப்பது குறித்து இன்று பட்டியலை வெளியிட்டனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் பல பேருக்கு ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி விளையாடுவாரா? அல்லது விளையாட மாட்டாரா என்பது சென்னை அணியின் ரசிகர்களுக்கு கேள்விக்குறிவாகவே இருந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை அணி நிர்வாகம் இன்று எந்த எந்த வீரர்களை விடுகிக்க உள்ளதோ அந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.
ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் அதற்கு பதிலாக யாரு சென்னை அணியை வழி நடத்துவார்கள் அல்லது இடத்தை யார் பூர்த்தி செய்வார்கள் என்று பல கேள்விகள் இருந்தது. அதில் இன்று சென்னை அணி எட்டு வீரர்களை வெளியிட்டிருந்தது அதில் தோனியின் பெயர் இல்லை எனவே அவர் கண்டிப்பாக சென்னை அணியில் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. ஒருவேளை அடுத்த ஐபிஎல் தோனி விளையாடவில்லை என்றால் அது அந்த முடிவு தற்போது எடுக்க வேண்டும்.
ஏனென்றால் அப்போதுதான் தோனிக்கு பதிலாக மற்றொரு வீரரை அணியில் எடுக்க முடியும். எனவே தோனியின் பெயரைப்பட்டியில் இல்லாததால் அவர் கட்டாயம் எந்த அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடுவார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியும் முன்னாள் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் சென்னை அணி வெளியிட்ட பட்டியலில் தோனியின் பெயர் இல்லை.
எனவே இது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் வரும் போட்டியில் தோனி கேப்டனாக இல்லை என்றால் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது போலவே சென்னை இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் வீட்டில் தோனி ஓய்வு குறித்து அல்லது ஜடேஜாவா மற்றும் ருதுராஜ் ஒருவரை கேட்டனாக நியமித்து ஓய்வு பெறுவார் என்றும் கருதப்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.