அதிரடியாக முடிந்த TNPL ஃபைனல் – மீண்டும் கோப்பையை தக்க வைத்து கொண்டது கோவை.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ல் நேற்று நடந்த நான்காவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆடுகளத்தில் அரிதான நிகழ்வு ஓன்று நடந்துள்ளது நடந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ் நாட்டில் கொண்டுவர
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ல் நேற்று நடந்த நான்காவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆடுகளத்தில் அரிதான நிகழ்வு ஓன்று நடந்துள்ளது நடந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ் நாட்டில் கொண்டுவரப்பட்டதுதான் தமிழ்நாடு பிரீமியர் லீக். இதுவரையில் 6 சீசன்கள் நடைபெற்ற நிலையில் நேற்று தான் 7வது சீசனானது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
TNPL 2023 பைனல் போட்டி :
இந்நிலையில் TNPL 2023தொடரின் பைனல் போட்டியானது நேற்றுஜூலை 12 இரவு 7.30 மணிக்கு திருநெல்வேலியில் இருக்கும் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைத்தனத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் தொடக்கமே கோவை அணிக்கு சாதகமாக டாஸ் அவர்களுக்கே கிடைத்து. ஏற்கனவே திண்டுக்கல் அணியை குவாலிபயர் 2 ல் வீழ்த்தி திரில்லிங் வெற்றியை பதிவு செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது இந்த இறுதி போட்டியில் வெல்லும் முனைப்பில் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் முதல் பேட்டிங் செய்ய லைக்கா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சுஜய் முதல் பந்தில் 4 ரன்களை விளாசினாலும் 2 வது ஓவரில் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு பின்னர் வந்த பி சச்சினும் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இப்படி ஆரம்பத்திலேயே தடுமாறிய கோவை அணிக்கு ஊன்றுகோலாக வந்தவர்கள் தான் சுரேஷ் குமார் மற்றும் முகிலேஷ் இவர்கள் இருவரும் பொறுமையாக விளையாடி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களை விளாசினார்கள்.
Class knock at the final!👊🏼#TNPL2023🏏#GethuKaatuvoma#sekkalisingamla#TNPLonstarsports#TNPLonfancode#NammaAatamAarambam💥#NammaOoruNammaGethu💪🏼 pic.twitter.com/tlNrS5CSfA
— TNPL (@TNPremierLeague) July 12, 2023
கோவை அதிரடி :
ஆனால் சுரேஷ் குமார் 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்போது அவர் 4 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்திருந்தார். இதற்கு பிறகு வந்த கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய அதிரடியாக ஆட ஆரம்பித்த உர் ரஹமான் சூழ்நிலையில் தலைகீழாக மாற்றினார். வர 21 பந்துகளில் 50 ரன்களை விளாசினார் இதில் 8 போர்களும் 1 சிக்சரும் அடங்கும். மேலும் கடைசி வரையில் இருந்த முகிலேஷ் ஆட்டமித்தினாலும் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை விளாசியது.
Mid innings!🥳#TNPL2023🏏#GethuKaatuvoma#sekkalisingamla#TNPLonstarsports#TNPLonfancode#NammaAatamAarambam💥#NammaOoruNammaGethu💪🏼 pic.twitter.com/IyGDwJ0pTz
— TNPL (@TNPremierLeague) July 12, 2023
நெல்லை பேட்டிங் :
இதனை தொடர்ந்து பைனலில் இந்த இமால இலக்கை எதிர்க்க களமிறங்கிய நெல்லை அணிக்கு முதல் ஓவரிலேயே சோகமாக ஸ்ரீ நெரஞ்சன் டக் அவுட்டானார். இதனையடுத்து வந்த அஜித்தேஷ் குருசாமியும் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கு பிறகு வந்த எந்த பேட்ஸ்மேன்களும் பெரிதாக ரன்கள் எடுக்காத நிலையில் கேப்டன் அருண் கார்த்தி மட்டுமே அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் நெல்லை அணியானது 15 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது,.
இனிமேல் எல்லாம் நாங்க தான்!👊🏼#TNPL2023🏏#GethuKaatuvoma#sekkalisingamla#TNPLonstarsports#TNPLonfancode#NammaAatamAarambam💥#NammaOoruNammaGethu💪🏼 pic.twitter.com/XQ85vPeSZy
— TNPL (@TNPremierLeague) July 12, 2023
இதனிடையே இந்த வெற்றியின் மூலம் கோவை அணியானது கோப்பையை தக்க வைத்து கொண்டது. மேலும் கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் முக்கியமான நேரத்தில் சுப்பிரமணியன் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் அது போட்டியின் திருப்பு முனையாக இருந்தது. மறுபுறம் நெல்லை அணியானது தங்களுடைய சொந்த மண்ணில் அழுத்தம் காரணமாக தோல்வியை தழுவியது.