எதிர்காலத்தில் இருந்து வந்த தோனி என்று இணையத்தில் வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

எம்.எஸ்.தோனி என்றால் உலகக்கோப்பை, விக்கெட் கீப்பிங், பினிஷர், என்று பல நியாபகம் வந்தாலும் சிஎஸ்கே என்ற ஓன்று எல்லாவற்றிக்கும் மேலே இருக்கிறது. ஏனென்றால் தோனி இந்தியாவிற்க்காக ஆடி வரும் அதே சமயத்தில் தான் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது. அப்போது பல அணிகளில் இந்தியாவின் நட்ச

By ·

எம்.எஸ்.தோனி என்றால் உலகக்கோப்பை, விக்கெட் கீப்பிங், பினிஷர், என்று பல நியாபகம் வந்தாலும் சிஎஸ்கே என்ற ஓன்று எல்லாவற்றிக்கும் மேலே இருக்கிறது. ஏனென்றால் தோனி இந்தியாவிற்க்காக ஆடி வரும் அதே சமயத்தில் தான் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது. அப்போது பல அணிகளில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் இருந்த நிலையில் தமிழ் நாட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒருவர் தேவைப்பட்டர்.

அப்போது தமிழ் நாட்டில் சில வீரர்கள் இருந்தாலும் வட மாநிலத்தை சேர்ந்த தோனியை தங்களுடைய அணியின் கேப்டனாக ஏற்றுக்கொண்டனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். இந்நிலையில் அன்று தொடங்கிய சென்னை அணியின் சகாப்தம் இன்று வரையில் தோனியுடனேயே தொடர்கிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை இறுதி போட்டிக்கு சென்றதில் இருந்து 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றது வரையில் சென்னை அணி பல சாதனைகளை புரிந்திருக்கிறது.

சொல்லப்போனால் தோனியும் சென்னை அணையும் ஒன்றவே வளர்ந்தார்கள் என்றே சொல்லலாம். இதனால் ரஞ்சியை சேந்த தோனியை தமிழ் நாட்டு ரசிகர்கள் தங்களுடைய வளர்ப்பு பிள்ளையாகவே பார்க்கின்றார். இந்த நிலையில் தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த போட்டியில் நடந்த ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ :

அதாவது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சென்னை vs பஞ்சாப் போட்டியில் வயதான ஒருவர் அமர்ந்து இருக்கையில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார். இதில் ஆச்சரியமடைய செய்யும் விஷயம் என்னவென்றால் அவர் சில வினாடிகள் தோன்றிய நிலையில் பார்ப்பதற்கு வயதான தோனி போல அதே முக ஜாடையில் காட்சியளித்தார்.

இதுதான் உண்மை :

இதனால் ரசிகர்கள் பலரும் தோனி தான் எதிர்காலத்தில் இருந்து வந்து போட்டியை ரசிக்கிறார் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது தோனி கிடையாது. அவர் மற்றவரகளை போல போட்டியை பார்க்க வந்த சென்னை அணியின் ரசிகர் அவ்வளவுதான். மற்றபடி அவர் ரசிகர்கள் சொல்வதை போல எதிர்கால தோனியோ அல்லது தோனியின் மறுபிறவியோ கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை