“பீட்டர்சன் கருத்து மோசமானது” ஏற்கனவே என்னுடைய வீரரை நான் இழந்திருக்கிறேன் – கொந்தளித்த நாதன் லயன்.

தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியானது நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இந்த போட்டியில் அவர்களே வெல்வதற்கு வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனிற்கு 100 டெஸ்ட

By ·

தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியானது நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இந்த போட்டியில் அவர்களே வெல்வதற்கு வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனிற்கு 100 டெஸ்ட் போட்டி என்ற பெருமையோடு விளையாடி கொண்டிருக்கும் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த அவருக்கு காலில் தசை பிடிப்பு போன்று ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மேலும் நேற்று 4 வது நாளில் கூட ஊன்றுகோலுடன் தான் மைத்தனத்திற்கு வந்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று நடந்த 4வது நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென விழ தொடங்கிய நிலையில் அஸ்திரலியா தாங்கள் நினைத்தை விடவும் அதிக விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் நாதன் லயன் களமிறங்கினர். நடக்கவே சிரமப்பட்ட அவர் 13 பந்துகள் விளையாடி 15 ரன்களை குவித்தார். மேலும் நயன் லயன் பேட்டிங் செய்ய வரும் போது மைத்தனத்தில் இருந்த அனைவருமே எழுத்து நின்று மரியாதை கொடுத்தனர்.

இந்நிலையில் தான் நாதன் லயன் மைதானத்திற்க்குள் நுழையும் போது வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் இங்கிலாந்து அணி அதிரடி வீரரான கெவின் பீட்டர்சன் “நினைத்து பாருங்கள், இப்போது நாதன் லயனிற்கு தலையில் அடிபட்டு அவருக்கு பதிலாக டாட் மர்பி வந்தால் எப்படி இருக்கும் என்று கூறினார் கெவின் பீட்டர்சன். இவர் இப்படி கூறியது பேசும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களின் நேற்று போட்டி முடிந்து பேசிய நாதன் லயன் கூறுகையில் “நான் மைத்தனத்தில் தலையில் அடிபடுவதற்காக செய்கிறேன் என்ற கருத்துக்களை கேள்வி பட்டேன். நான் ஏற்கனவே என்னுடைய அணி வீரர் (பில் ஹியூக்ஸ்) ஒருவருக்கு தலையில் அடிபட்டதால் அவரை இழந்தேன். உண்மையில் அவர் கூறியது மோசமான கருத்து. எனக்கு தெரியும் சில அபாயங்களை நான் எதிர்கொள்ள வேண்டும் என்று. ஆனால் என்னுடைய அணிக்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன்.

உங்களுக்கு எப்போதுமே தெரியாது ஆஷஸ் தொடரில் 15 பார்ட்னர்ஷிப் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று. நான் காலத்தில் இறங்கி என்னுடைய ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவது எனக்கு பெருமையான ஓன்று. நான் இதனை திரும்ப திரும்ப செய்து கொண்டே இருப்பேன். ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய அணி வீரர்களுக்கு என்னால் உதவி செய்யமுடியும் என்றார்கள் அதனை நான் எப்போது செய்வேன் என்றார் நாதன் லயன்.

பில் ஹியூக்ஸ் (Forever 63 Not Out) :

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பில் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய உள்ளூர் விளையாட்டு போட்டியின் போது வேகப்பந்து வீச்சளர் சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து பில் ஹியூக்ஸ் தலையில், கழுத்தோரத்தில் தாக்கியது. இதனால் அவர் 27 நவம்பர் மாதம் 2014ஆம் ஆண்டு காலமானார். இவர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது அடிபட்ட காரனடினால் அவருக்கு மரியாதை நிமிர்த்தமாக Forever 63 Not Out என்ற பட்ட பெயரும் இருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டுதான் அதற்கு பிறகு ஹெல்மெட்டில் பாதுகாப்பிற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை