மழை நேரத்தில் லக்னோ மைதான ஊழியர்களுக்கு உதவி செய்த ஜான்ட் ரோட்ஸ் – வீடியோ உள்ளே.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனில் பல சர்ச்சையான வீடியோக்கள் சோசியல் மீடியாவை வைரலாகி வருகின்றன. அவற்றில் சில ரசிகர்களின் மனதிற்கு வருத்தத்தை கொடுத்தாலும் சில வீடியோக்கள் ரசிகர்களின் மனதை கவரும். அந்த வகையில் தான் கடந்த சென்னை மற்றும் லக்னோ போட்டியில் நடந்த ஒரு விஷயம் தற்போது சோ

By ·

தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனில் பல சர்ச்சையான வீடியோக்கள் சோசியல் மீடியாவை வைரலாகி வருகின்றன. அவற்றில் சில ரசிகர்களின் மனதிற்கு வருத்தத்தை கொடுத்தாலும் சில வீடியோக்கள் ரசிகர்களின் மனதை கவரும். அந்த வகையில் தான் கடந்த சென்னை மற்றும் லக்னோ போட்டியில் நடந்த ஒரு விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி டாஸை வென்று பந்துவீச முடிவு செய்தது.

இந்நிலையில் அந்த போட்டியில் சென்னை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தீபக் சாஹார் அணியில் இணைந்தார். லக்னோ அணியின் கேப்டன் ராகுல் இந்த போட்டியில் இருந்து விலகியதால் க்ருனால் பாண்டியா கேப்டனாக செயல் பட்டு வந்தார். மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

முக்கியமாக அதன்பின் லக்னோ மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியது. மழை தொடர்ந்து பொழிந்த வண்ணமே இருந்ததனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டது. இது சென்னை அணி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் செய்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.     

மழை தொடங்கியவுடன் மைதானத்தை மூடுவதற்காக மைதான ஊழியர்கள் கவர்களை எடுக்க ஓடிய போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் பீல்டிங் பயிற்சியாளரும் ஆனா ஜான்டி ரோட்ஸ் அவர்களுக்கு உதவ சென்றார். ஒரு கட்டத்தில் மழை நின்றவுடன் கவர்களை நீக்கினாலும் சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்தது. இதனால் அப்போதும் ஊழியர்களுக்கு உதவினார. அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதேபோல் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் போது, ​​ஜான்டி ரோட்ஸ் அந்த நேரத்தில் டர்பன் சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக பணியாற்றினார். அப்போது ஐபிஎல் 45வது போட்டியில் பார்த்தது போல், SA20 25வது போட்டியிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது. SA20 லீக்கின் போது ​​அனைத்து வீரர்களும் கொட்டும் மழையில் ஒழிய இடம் தேடி ஓடும் போது ​​ஜான்டி ரோட்ஸ் மைதான ஊழியர்களுக்கு மழையை பொருட்படுத்தாமல் ஆடுகளத்தை மறைக்க உதவ முன்வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை