கதவுக்கு பின்னால் நடக்கும் விஷயம்.. நிறைய கேமிரா இருக்கும் – கேஎல் ராகுலுக்கு நடந்த சம்பவம் குறித்து முன்னாள் வீரர் கருத்து.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நடுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில நாட்கள் மட்மே அரையிறுதி போட்டிக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் ராஜிவ் காந்தி சரசவதேச மையதானத்தில் மோதியது. பல அணிகள் ஒரே புள்ளியில் இருப்பதினால் இந்த போட்டியி

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நடுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில நாட்கள் மட்மே அரையிறுதி போட்டிக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் ராஜிவ் காந்தி சரசவதேச மையதானத்தில் மோதியது. பல அணிகள் ஒரே புள்ளியில் இருப்பதினால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது எனப்து இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை வென்ற முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதை அடுத்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி பவர் பிளே ஓவரிலே முதல் விக்கெட்டை இழந்தது. இதனை தொடர்ந்து அதிரடி வீரரான மார்கஸ் ஸ்டோன்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர் பிளே ஓவரில் குறைவான ரன்களை அடித்தது லக்னோ அணி. மேலும் இதற்கு பிறகு ராகுல் 29 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி தடுமாறியது.

இதனை தொடர்ந்து லக்னோ அணிக்கு குறைவான ரன்கள் மட்டுமே கிடைத்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களில் இழந்த 165 ரன்களை மட்மே அடித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி முதல் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் அதற்கு பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அற்புதமாக விளையாடி லக்னோ அணியின் பந்துவீச்சை தொம்சம் செய்தனர்.

இதனால் ஹைதராபாத் அணி 9,4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் போட்டியை வென்றது ஹைதராபாத் அணி. இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலை அழைத்த பேசியிருந்தார். அதன் போது கேஎல் ராகுலை சஞ்சீவ் கோயங்கா கொஞ்சம் திட்டியது போல தெரிந்தது. இது தொடர்பான வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் பலவிதமான கருத்துக்களை கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியதாவது : இந்த உரையாடல்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்க வேண்டும் என்று நீங்கள் எப்போதும் உணர்கிறீர்கள். அரங்கத்தைச் சுற்றி பல கேமராக்கள் உள்ளன எனவே எல்லா விஷியங்களும் கேமிராவில் பாதிவாகின்றது. கே.எல். ராகுல் இப்போது செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பிற விஷயங்களுக்குச் செல்லப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கே விவாதிக்கப்பட்டதை விளக்க முடியும்.

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கே.எல்.ராகு தன்னுடைய நிதானத்தைக் கடைப்பிடித்ததற்காகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வீடியோ பதிவானது சோசியல் மீடியாவில் விரைவாக பரவிய நிலையில் கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் குறி வருவது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை