அண்ணனை வீழ்த்திய தம்பி – லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்.

ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. ஏற்கனவே குஜராத் அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கும

By ·

ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. ஏற்கனவே குஜராத் அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்த போட்டியையும் வெற்றிபெறும் முனைப்பில் இருக்கிறது குஜராத்.

இந்நிலையில் முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடியது. அந்த வகையில் குஜராத் அணியின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய விர்த்திமான் மிகவும் சிறப்பாக விளையாடினார் 20 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதே நேரத்தில் சுப்மன் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரையும் தவிர ஹர்திக் 25 ரன்களும், மில்லர் ஆட்டமிழக்காமல் 21 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை விளாசியது. மேலும் லக்னோ அணி சார்பில் அவேஷ் கான் மற்றும் மொஹ்சின் கான் 1-1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய லக்னோ சிறப்பான தொடக்கத்தை பெற்றது. கைல் மேயர்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் புயலடித்த தொடக்கத்தை தொடங்கினர். இருப்பினும் அரை சதத்தை தவறவிட்ட கைல் மேயர்ஸ் வடிவில் முதல் அடி லக்னோ அணிக்கு கிடைத்தது. அவர் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து குயின்டன் டி காக் அரைசதம் அடித்தார்.

டி காக் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்தார் சிறப்பாக விளையாடிய நிலையில் அவரை தவிர யாரும் பெரிதாக விளையாடவில்லை. இறுதியில் படோனி சில பெரிய ஷாட்களை அடித்தார் ஆனால் அவரும் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்நிலையில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை