லக்னோவிற்கு புதிய சிக்கல், மொத்த பலத்துடன் தயாராக இருக்கும் ஹைதராபாத் – வெற்றி யாருக்கு?

உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது 16 சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 9வது போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, இரண்டாவது போட்டியில

By ·

உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது 16 சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 9வது போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, இரண்டாவது போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. ஆனால் அந்த தோல்வி நியாயமானது தான். சொல்லப்போனால் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தான் டெல்லி அணி சென்னையிடம் தோற்றது.

இதனால் கண்டிப்பாக தங்களுடைய மூன்றாவது போட்டியில் வென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் லக்னோ அணிக்கு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல பலம் வைடன்ஹா விகேட்கீப்பர் பேட்ஸ்மேன் தற்போது அணியில் இணைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிகாக் லக்னோ அணியுடன் இணைத்து இருப்பது லக்னோ அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் டி காக் தற்போது அணியில் இணைத்துள்ளதால் புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ.

ஏனெற்றால் கடந்த ஐபிஎல் போட்டிகளில் டி காக் தொடக்க வீரராக களமிறங்கினார், ஆனால் தற்போது லக்னோ அணியில் கடந்த போட்டிகளில் 2 அரை சதங்களை விளாசிய கைல் மேயர்ஸ் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டதனால் அவரை நீக்க மாட்டார்கள். அவர்களை போலவே மார்க் வுட்டையும் நீக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் யாரை நீக்கிவிட்டு டி காக்கை அணிக்குள் கொண்டு வர போகிறார்கள் என்று தெரியவில்லை.இந்த பிரச்னை போதாதென்று டி காக் காக் அல்லது கேப்டன் கே.எல்.ராகுல் இருவரில் யார் களமிறங்க இருக்கிறார்கள் என்பது கூட புரியாத புதிராகத்தான் உள்ளது.

ஹைதராபாத் அணி :

டெல்லி அணிக்கு இப்படி சில பிரச்சனைகள் இருக்கும் நேரத்தில் ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் பேட்டிங் ஆர்ட்டரிலும் சரி பௌலிங் ஆதரிலும் அரி சரியாக வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் தொடர்ந்து விளையாடிய 2 போட்டிகளிலும் பெரிய தோல்வியை ஐதராபாத் அணி சந்தித்துள்ளது. டாப் ஆர்ட்டரில் அபிஷேக் சர்மா, த்ரிபாட்டி, புரூக் மார்க்ரம், கிளாஷான், மயங்க் அகர்வால் என்று திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.

அவர்களை தவிர்த்து வேக்கப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் என திறமைவாய்ந்த பலர் இருக்கின்றனர். அதோடு சுழல் பந்துவீச்சாளர் மார்க்ரம் இருப்பதினால் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

வெற்றிவாய்ப்பு :

இருந்த போதிலும் இன்று நடக்கும் போட்டி லக்னோ மைதானம் என்பதினால் பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாது. எனவே இரண்டு அணிகளுக்கும் சம வெற்றி வாய்ப்பு இந்த போட்டியில் இருக்கிறது. ஆனால் இது லக்னோவின் மைதானம் என்பதினால் வெற்றிபெறுவது லக்னோவிற்கு சுலமபாக இருக்கலாம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை