பஞ்சாப் அணியை அவர்களது மண்ணில் எதிர்கொள்ளும் லக்னோ – இந்த முறையாவது வெற்றி பெருமா ? கணிப்பு இதோ.
இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் ஐபிஎல்லில் மோதின, அப்போட்டியில் பஞ்சா
இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் ஐபிஎல்லில் மோதின, அப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. லக்னோ அணி இது வரை 7 போட்டிகளில் 4 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. அதே போல் தான் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 4 போட்டிகளை வென்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் இருந்து வருகிறார். இவர் இந்த சீசன் ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்த நிலையில் அது பெரும் விமர்சத்திற்க்குள்ளகியது. லக்னோ அணி இந்த வருடம் சிறப்பாக செயல் பட்டாலும் எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை கூட போரடி தோற்று வருகிறது. அதிலும் கடைசியில், விளையாடிய குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் முதல் பொறுமையாக விளையாடிய ராகுல் 61 பந்துகளில் 64 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேர் அதன் பின் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் வெளியேற லக்னோ அணி தோல்வியை தழுவியது. லக்னோ அணியை பொறுத்த வரை மிடில் ஆர்டர் வலிமையிண்மையாக காணப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இருந்து வருகிறார். இவர் சில போட்டிகளில் காயம் காரணமாக விலகிய நிலையில் சாம் கரண் கேப்டன்சி செய்து அணிக்கு பலம் சேர்க்கிறார். இந்த அணி கடைசியாக விளையாடிய போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்டன. அதில் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் தனது அற்புதமான பேட்டிங்கை வெளிக்கொண்டு வந்தனகூறுகள்ர். பௌலிங்கை பொறுத்த வரை கூட ஒரு சில ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினாலும் இறுதியில் அதை சமாளித்து வெற்றி பெறுகிறார்கள். அர்ஷ்தீப் சிங் அணிக்கு முக்கியமான பௌலராக இருந்து வருகிறார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து இரு முறை ஸ்டெம்பை உடைத்து பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
வெற்றி கணிப்பு
லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்ப கட்டத்தில் திணறியே வருகின்றனர். லக்னோ அணியின் பௌலிங் ஓர் அளவு சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் பஞ்சாப் அணியை பொறுத்த வரை பௌலிங் மற்றும் பேட்டிங் வரிசை சிறப்பாகவே இருந்து வருக்கிறது. அணியின் பினிஷராக தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் இருந்து வருகிறார், இது அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெறவே சாத்திய கூறுகள் இருந்து வருகின்றன.