ஐபிஎல் போட்டியில் 200வது முறையாக கேப்டனாக விளையாடிய தோனிக்கு CSK நிர்வாகம் கொடுத்துள்ள விருது – வீடியோ உள்ளே.

ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.இப்போட்டியானது சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது . அதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் போடா முடிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ம

By ·

ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.இப்போட்டியானது சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது . அதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் போடா முடிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பரிசு ஒன்றை வழங்கியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய மூத்த கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று சென்னை அணிக்காக கேப்டனாக தனது 200வது போட்டியில் விளையாடுகிறார். ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை சிஎஸ்கே கேப்டன் தோனி பெற்றுள்ளார். சொல்லபோனால் இன்னும் சில வருடங்களுக்கு யாராலும் இந்த சாதனையை முறியடிக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு சிறப்பு தோனிக்கு இருக்கிறது இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியின் தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் படங்களை வென்றிருக்கிறது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தோனி ஜார்கண்டின் மாநிலத்தில் உள்ள ராஞ்சியைச் சேர்ந்தவர் என்றாலும், சென்னையின் மஞ்சள் நிறம் என்பது அனைவரின் மனதிலும் உணர்வு பூர்வமான ஒன்றாக கலந்து விட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களினால் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தன்னுடைய 200வது ஆட்டத்தை விளையாடுகிறார். அப்படியொரு நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தல 200 என்ற அடைமொழியுடன் கூடிய விருது ஒன்றை தோனிக்கு கொடுத்துள்ளனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது தோனிக்காக முன்னாள் பிசிசிஐ தலைவர் என் சீனிவாசனும் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில் ஐபிஎல்லில் வர்ணனை செய்து கொண்டிருந்த ரவி சாஸ்திரியும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு மைதானத்தில் இருந்தார். இதனுடன், சிஎஸ்கே அணியினர் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். மேலும் CSK இன் முழு ஊழியர்களும் இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை