சிறிய விஷியத்தில் கூட இந்திய ராணுவத்தின் மீது தோனி வைத்திருக்கும் மரியாதை – வீடியோ உள்ளே.
சென்னையின் வளர்ப்பு மகன் எம்.எஸ்.தோனியை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உலகக்கோப்பை தொடர்ந்து ஐபிஎல் அவரையில் இந்தியாவிற்காகவும் சென்னை ரசிகர்களுக்காகவும் பல போட்டிகளில் விளையாடி கோப்பையை வாங்கி கொடுத்திருக்கிறார். அதே போல கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இந்தியன் ஆர்ம
சென்னையின் வளர்ப்பு மகன் எம்.எஸ்.தோனியை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உலகக்கோப்பை தொடர்ந்து ஐபிஎல் அவரையில் இந்தியாவிற்காகவும் சென்னை ரசிகர்களுக்காகவும் பல போட்டிகளில் விளையாடி கோப்பையை வாங்கி கொடுத்திருக்கிறார். அதே போல கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இந்தியன் ஆர்மி மீதும் அதிக மரியாதை கொண்டவர் எம்.எஸ்.தோனி அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
ஏனெற்றால் தோனி இந்தியன் ஆர்மியில் பாராசூட் ரெஜிமென்ட்டின் டெரிடோரியல் ஆர்மி பிரிவில் லெப்டினன்ட் கர்னல் என்ற கெளரவப் பதவியைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் அவர் பல இடங்களில் தன்னுடைய தாய் நாட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்பதனை நான்றாகவே நாம் காணமுடியும். கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி கொண்டு செல்லும் போது தன்னுடைய சொந்த மகள் இந்தியாவில் பிறந்ததை கூட காணாமலே இந்தியாவிற்காக விளையாடினார்.
அதே போல சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதை கூட 2020ஆம் ஆண்டு 73வது சுத்ந்திர தினத்தன்று தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அவருடன் நட்புக்கு இலக்கணமான ரெய்னாவும் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இப்படி பல விஷியங்களை நாம் சொல்லிக்கொண்டே செல்லலாம். அதுமட்டுமல்லாமல் அவர் அணியின் சட்டை முதற்கொண்டு, பேக், தொப்பி என பல விசியங்களில் இந்தியாவை பாதுகாக்கும் வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் ஆர்மி உடைகளை போன்ற நிறத்தில் இருக்கும். அதன் மூலம் இந்தியன் ஆர்மி குறித்த விழிப்புணர்வை தன்னுடைய ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தவர் தோனி.
ஒரு முறை அவர் அணியும் கிரிக்கெட் கையுறைகள் கூட ஆலிவ் கிரீன் நிறத்தில் இருந்தது. அது அப்போது பெரிய அளவு வைரலானது.அப்படியொரு நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனில் மீண்டும் சென்னை அணிக்கு கேப்டான கடந்த 2 போட்டிகளில் வெற்றிபெற்றுக்கும் நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது தோனி விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது தீபக் சாகர் தோனியிடம் சென்று பரீட்சைக்கு படிக்கிறீர்களா என்று கேட்டார். அப்போது அவர் கையில் இருக்கும் ஒரு விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.அதாவது தோனியின் புத்தகம் படித்து கொண்டிருக்கும் போது கையில் ஆர்மி நிறம் இருக்கும் பேனாவை வைத்திருந்தார். அதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தோனியின் தேசபட்டறை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.