ஒரு பௌலரினால் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது – பும்ரா குறித்து 1983 உ.கோ ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கருத்து.

இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து முடிந்து அதில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளைய

By ·

இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து முடிந்து அதில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. அதை முடிந்து கொண்டு அயர்லாந்து அணியுடன் மோத இருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே பல போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவரும் இந்திய அணியின் சில வீரர்களுக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்ய இருக்கின்றனர். அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவின் செயல்பாடு பொறுத்தே உலக கோப்பையில் அவர் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது தெரியும்.

இந்த நிலையில் தான் பும்ரா உடற்தகுதி குறித்தும் அவர் இதற்கு பிறகு என்ன செயய்வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளார் 1983 உலக கோப்பை ஜாம்பவான் ஆல்ரவுண்டர் மதன் லால். அவர் கூறுகையில் ” அவர் அயர்லாந்து செல்வது மிகவும் நல்லது. அந்த போட்டியின் மூலம் எப்படி விளையாடுகிறார் என்றும் அவரது உடற்தகுதி குறித்து அவர் அந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை பற்றியும் அறிந்து கொள்வார்.

பும்ரா போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி தன்னுடைய உடற்தகுதியை பராமரிக்க வேண்டும். அவர் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகவும் முக்கியம். தேவையில்லாத வாய்ப்புகளை எடுக்கக் கூடாது. பும்ரா நமக்கு சொத்தாக இருந்தாலும், ஒரு பந்து வீச்சாளர் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு யூனிட்டாக செயல்பட வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றார் அது நமக்கு கடினமாகி விடும் என்ற உலக கோப்பை ஜாம்பவான் மதன் லால்.

மேலும் பேசிய அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறித்தும் தன்னுடைய கருத்தை கூறியிருந்தார். அவர் கூறியதாவது “மிடில் ஆர்டர் பேட்டர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள், இதனால் அவர்களது தந்திரம் மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் செயல்படவில்லை என்றால், இந்த கடின உழைப்புக்கு என்ன மதிப்பு? விளையாடுவது வீரர்கள் சார்ந்தது, அது மிடில் ஆர்டரை வலுவாகவும் நம்பிக்கையுடனும் மாற்றும். சிறந்த மிடில் ஆர்டர் இருந்தால் மட்டுமே இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றார் மதன் லால்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை