தோனி அடுத்த ஐபிஎல் போட்டியில் எனக்கு இந்த விஷயத்தை செய்வதாக கூறினார் – தோனியின் புகழ்பாடும் மஹீஷ் தீக்‌ஷனா

ஐபிஎல் போட்டிகளில் மறுக்க முடியாத ஒரு அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். சொல்லப்போனால் அதிகமான ரசிகர் பட்டாளம் உள்ள ஐபிஎல் அணி என்றாலும் அது சென்னை தான். அதற்கு முக்கியமான ஒரு காரணம் தோனி. ஏனென்றால் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வருத்தத்துடன் சேர்த்து 5 முறை

By ·

ஐபிஎல் போட்டிகளில் மறுக்க முடியாத ஒரு அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். சொல்லப்போனால் அதிகமான ரசிகர் பட்டாளம் உள்ள ஐபிஎல் அணி என்றாலும் அது சென்னை தான். அதற்கு முக்கியமான ஒரு காரணம் தோனி. ஏனென்றால் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வருத்தத்துடன் சேர்த்து 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். அதோடு அடுத்த வருடமும் விளையாட இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் இந்த வருடம் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட மஹீஷ் தீக்‌ஷனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி எப்படிபட்டவர். அவர் மற்ற அணிவீரர்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அவர் பேசுகையில் “எம்எஸ் தோனி ஒரு அற்புதமான தலைவர் மற்றும் கேப்டன். அவரது அமைதியானது நாம் ஒவ்வொருவரும் பயனடைந்த ஒன்று. அவரைப் போன்ற ஒருவரிடம் நீங்கள் பேசும்போது, ​​அவர் எப்படி அழுத்தத்தைக் கையாளுகிறார் என்பதைப் பார்க்கும்போது, ​​அதைஅவர் எப்படிச் செய்கிறார் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் மட்டுமல்ல சென்னை அணியில் உள்ள ஒவ்வொருவரும் அவரைச் சுற்றி இருந்து கற்றுக்கொண்டோம்

தோனி அனைத்தும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் மணிக்கணக்கில் பேசலாம், அவருடன் சாப்பிடலாம். அவரும் மிகவும் நேர்மையான மனிதர். அவர் உங்களை பற்றி ஏதாவது சொல்ல விரும்பினால், அவர் அதை உங்களிடம் சொல்வார். அவர் மிகவும் அடக்கமானவர், அவருடன் விளையாடுவதற்கும் டிரஸ்ஸிங் அறையைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஆசீர்வதிக்கப்பட்டவராக நான் உணர்கிறேன்.

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்குப் பிறகு நான் வீட்டிற்குச் செல்ல இருந்தபோது ​​நான் தோனி அவர்களை சந்தித்தேன். அவர் என்னிடம் கூறியது ஏனென்றால் நான் களத்தில் சரியாகச் செயல்படவில்லை, அடுத்த முறை உங்களுக்கு பந்துவீச்சு பயிற்சி இல்லை பேட்டிங் பயிற்சி மற்றும் பீல்டிங் பயிற்சி மட்டுமே உள்ளது என்றார்.

இந்தியாவில் ரசிகர் கூட்டம் வெறித்தனமாக இருக்கிறது. இலங்கையிலும் நாங்கள் விளையாடும் போது அனைத்து மைதானங்களும் ரசிகர்கள் கூட்டமாக நிரம்பி வழிகின்றன. இது வீட்டைப் போன்றது. மேலும் நிலைமைகள் மற்றும் வானிலை கூட மிகவும் ஒத்திருக்கிறது. தர்மசாலாவில் மட்டுமே குளிரை உணர முடியும். ஏனைய பகுதிகளில் இலங்கையைப் போன்றே உள்ளது என்று கூறினார் தீக்ஷனா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை