இந்தியாவின் இந்த வீரரை வீழ்த்துவதே என்னுடைய இலக்கு – மஹீஷ் தீக்ஷனா அதிரடி பேட்டி
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியானது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதேவேளையில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் அனைத்து அணிகளுமே தற்போது தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெறப்போகும் போட்டி குறித்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில் “இந்திய அணிக்கு எதிராக என்னுடைய திட்டத்தை நான் மிகவும் சிம்பிளாகவே வைத்திருக்க போகிறேன். டி20 போட்டிகளை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள்ஸ் கொடுப்பதில் தவறில்லை. ஏனெனில் பெரிய ஷாட்களை தருவதை விட சிங்கிள்ஸ் கொடுப்பதால் நிச்சயம் ஏதாவது ஒரு தவறை பேட்ஸ்மேன்கள் மேற்கொள்வார்கள்.
ஆனால் 50 போட்டிகள் என்பது முற்றிலும் மாறுபட்டது. 11-ஆவது ஓவர் முதல் 40-ஆவது ஓவர் வரை உள்வட்டத்திற்கு வெளியே நான்கு பீல்டர்கள் மட்டும் இருப்பதினால் அந்த மிடில் ஓவர்களில் நாம் விக்கெட்டை வீழ்த்த பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அந்த வகையில் என்னுடைய திட்டத்தை மிகவும் தெளிவாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
நிச்சயம் என்னுடைய பந்துவீச்சு எனது அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அதோடு இந்தியாவில் இதுவரை நான் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதே கிடையாது. எனவே இம்முறை உலகக் கோப்பை போட்டியில் அவரை வீழ்த்த வேண்டும் அதுவே என்னுடைய இலக்கு என்று மகேஷ் தீக்ஷனா கூறியுள்ளார். –
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்க இருக்கும் இலங்கை அணி தங்களது பலத்தை அங்கு நிரூபித்து விட்டு பிறகு உலக கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்க இருக்கிறது. மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டி வரை முன்னேறியது போன்று இம்முறையும் நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என மகேஷ் தீக்ஷனா கூறியது குறிப்பிடத்தக்கது.