ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணிக்கு கேப்டனாக மாற்றுங்கள் – பரபரப்பான கருத்து தெரிவித்த தினேஷ் கார்த்திக்.
உலக கோபப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான அட்டவணை ஏற்கனேவே கொடுக்கப்பட்ட நிலையில், இந்த போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி பல முக்கிய போட்டிகளில் விளையாட இருக்கிறது. அவைகளில் ஒன்றுதான் ஆசிய கோப்பை 2023. கிரிக்கெ
உலக கோபப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான அட்டவணை ஏற்கனேவே கொடுக்கப்பட்ட நிலையில், இந்த போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி பல முக்கிய போட்டிகளில் விளையாட இருக்கிறது. அவைகளில் ஒன்றுதான் ஆசிய கோப்பை 2023. கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் படி இந்த கோப்பைக்கு இந்திய அணியில் B பிரிவு அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் சில தகவல்களின் படி உலக கோப்பையில் இடம்பெறாத இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2023 செப்டம்பர் 23 – அக்டோபர் 8, 2023 க்கு இடையில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள பல விளையாட்டு நிகழ்வில் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திர அஸ்வின் கேப்டனாக அந்த போட்டியில் இருக்காம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் “அஸ்வின் பந்துவீச்சின் தரம், அவர் எடுத்த விக்கெட்களின் எண்ணிக்கை, அவருக்கு கிடைத்த தொடர் நாயகன் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் அஸ்வினும் ஒருவர் என்று கூறலாம். வரும் ஆசிய கோப்பை போட்டிக்கு இந்தியா தங்களுடைய B அணியை அனுப்பும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் வரும் உலக உலகக்கோப்பை போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர்.
எனவே அந்த அணிக்கு அஸ்வினை கேப்டனாக மாற்றலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் அந்த கேப்டன் பதவிக்கும் முற்றலும் தகுதியான ஒருவர். அவர் இதுவரையில் என்ன சாதனைகள் செய்திருந்தாலும், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் தகுதியைப் பெற்ற ஒருவர் அஸ்வின் என்று எனக்கு தோன்றுகிறது. எனக்கு புரிகிறது அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால் வரும் ஆசிய கோப்பைக்கு தேர்வாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டனாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். அவருக்கு கேப்டன் பதவி மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் தினேஷ் கார்த்திக். 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருந்தது. இருப்பினும், இந்தியா இரண்டு முறையும் தங்கள் அணிகளை அனுப்பவில்லை.
இந்நிலையில் அஸ்வின் பற்றி பேசுகையில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதியது. ஆனால் இதில் படுதோல்வியை தழுவியது இந்தியா. இந்தியாவின் இடஙக தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது அஸ்வின் இடம்பெறாததுதான். டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின் WTC சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இடம்பெறதது குறித்து பல கிரிக்கெட் ஜாம்பவங்கள் விமர்சித்திருந்தது குறிப்பிடதக்கது.