மூளையை யூஸ் பண்ணுங்க.. முதல் நாளே ஹீரோவாக முயற்சிக்காதீங்க – பும்ராவிற்கு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் அறிவுரை.
இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய்து. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்
இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய்து. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்தனர். அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் பும்ரா தன்னுடைய முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் தான் மீண்டும் வந்துவிட்டேன் என்பதை உலகிற்கு கூறினார் பும்ரா. மேலும் இந்த போட்டி முடிந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியானது இன்னமும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார் பும்ரா, இந்த போட்டி பும்ராவுக்கு முக்கியமான காலகட்டம் என்பதினால் அசத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தான் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மகாயா ந்தினி பும்ராவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் “ஜஸ்பிரித் பும்ரா அனைவரும் பார்க்க விரும்பும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், எனது பார்வையில், காயத்தில் இருந்து வெளியே வரும் ஒரு வீரராக, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், நீங்கள் உங்கள் மூளையைப் பயன்படுத்த வேண்டும், உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும். முதல் நாளிலிருந்தே ஹீரோவாக முயற்சிக்காதீர்கள்.
ஏனென்றால் மீண்டும் உங்களுக்கு காயம் ஏற்படலாம் . அதற்கு பதிலாக எங்களுக்குத் தெரிந்த அந்த சூப்பர் ஃபிட் மனிதனாக மாறுவதற்கு உங்களை முயற்சி செய்து கொள்ளுங்கள். பும்ராவுக்கு இது மட்டுமே எனது அறிவுரை. அவர் காயங்களைப் பார்க்கக்கூடாது. இப்போது அவர் சிறந்ததைப் பெறுவதற்கு தன்னைத்தானே மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.
அனைவருக்கும் தெரியும், உங்களுக்குத் தெரியும், இறுதிப் போட்டி வரும்போது பும்ரா இந்திய அணிக்கு இன்றியமையாதவராக இருப்பார். இப்போது திடீரென்று இளம் வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை இந்தியா முக்கிய நாடாக மாறிவிட்டது. இது ஒருபோதும் அப்படி இருந்ததில்லை, ஆனால் இப்போது வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை இந்தியா சிறந்த நாடாக உருவாகி வருகிறது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கூறினார்.