வீடியோ : மலிங்கா போலவே பந்துவீசி ஸ்டெம்புகளை பதம் பார்த்த அவரது மகன் டுவின் மலிங்கா.

கிரிக்கெட்டில் பலர் விளையாடி இருந்தாலும் சிலரை மட்மே ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும். அந்த வகையில் ஒருவரி கூறவேண்டும் என்றால் இலங்கை அணியின் முன்னாள் வீரரான லாசித் மலிங்காவை சொல்லலாம். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி பின்னர் கிட

By ·

கிரிக்கெட்டில் பலர் விளையாடி இருந்தாலும் சிலரை மட்மே ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும். அந்த வகையில் ஒருவரி கூறவேண்டும் என்றால் இலங்கை அணியின் முன்னாள் வீரரான லாசித் மலிங்காவை சொல்லலாம். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி பின்னர் கிட்டத்தட்ட 16 வருடங்கள் 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மேலும் இவர் சர்வதேச போட்டியில் இலங்கை அணிக்காக 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளர் மலிங்கா. மேலும் இவரது வித்தியாசமான படுத்துவீச்சிற்கு பல சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மன்கள் அஞ்சி இருக்கின்றனர். மேலும் யகர்களை சரியாக போடுவதில் மிகவும் திறமை சாலி என்றே கூறலாம். மேலும் ஐபிஎல் போட்டியிலும் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் இவர் மும்பை அணியின் பந்துவீச்சு துறைக்கு முதுகெலும்பாய் இருந்து பல் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். மும்பை அணி ஐந்து முறை கோப்பையை வென்ற போதும் அணியில் இருந்த வீரராகவும் மலிங்கா திகழ்கிறார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் பைனல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கடைசி ஓவரை வீச வந்து 2 விக்கெட்டுகளை சரியான நேரத்தில் வீழ்த்தி வெற்றியும் பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

பயிற்சியாளராக மலிங்கா :

ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இடுந்த போதிலும் அவர் தற்போது பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்து பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட அவர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

வைரல் வீடியோ :

இந்நிலையில் அவரை பற்றிய வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. அதாவது இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள மலிங்கா தன்னுடைய மகனான டுவின் மலிங்காவையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் அங்கு நியூயார்க் அணி வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்து கொண்டிருக்கும் வேளையில் அவரது மகன் டுவின் மலிங்கா அவரைப் பந்து வீசும் பயிற்சி வீடியோ ஒன்றினை எம்.ஐ நியூயார்க் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by MI New York (@minycricket)

அதில் பந்துவீசும் தன் மகனை பார்த்து “ஆக்சன் எல்லாம் ஒழுங்காக வருகிறது. சரியான வேகத்துடன் நேராக பந்துவீச தொடங்கினால் இன்னும் திறனை மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே டுவின் மலிங்கா வீசும் பந்து ஸ்டம்பை தாக்கினார். இந்த வீடியோ பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை