இதே மாறி விளையாடினா மும்பை அணி நிர்வாகம் இதை கூட செய்ய தயங்க மாட்டங்க – மனோஜ் திவாரி பேச்சு

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடை

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அணியில் ஒருங்கிணைப்பில்லை என்றும் அணியில் இரண்டு பிரிவாக உள்ளார்கள் என்று தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

அதற்கான காரணம் என்னவென்றால் கடந்து இரண்டு வருடங்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பையில் இந்தியன்ஸ் அணி டிரேடிங்கில் மூலம் வாங்கியது. அப்போதே அது மும்பை அணிக்குள் சில் சலசப்புக்களை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சில நாட்களிலே அவரை கேப்டனாகவும் மாற்றியது. மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவை மும்பை அணியின் வீரராக மாற்றியது. இது மும்பை அணி என்று ரசிகர்களிடையே பெரும் ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இதன் விளைவாகவே மும்பை அணிவிளையாவது அனைத்து மைதானத்தில் சென்று மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக கோஷம் விடுவதையும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முழக்கங்களை விட்டு வருகின்றனர். மும்பை அணியோ இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிபட்டியலில் பாதாளத்தில் இருந்து வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.

அதன் பின்பு நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகளிலும் 31 ரன்களிலும் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியிலும் மிகவும் பரிதாப நிலையில் 6 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறுகையில், ஐபிஎல் தொடரின் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த புள்ளி பட்டியல் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணியின் கேப்டன் ஆக மீண்டும் ரோஹித் ஷர்மாவை மாற்றலாம் என்றும் அது போன்ற முடிவுகளை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தயங்காது என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

இது தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. மும்பை அணி அடுத்ததாக 7ஆம் தேதி டெல்லி அணியையும் 11 ஆம் தேதி பெங்களூரு அணியையும் 14 ஆம் தேதி டெல்லி அணியையும் எதிர்கொள்ள உள்ளது அதில் வருகின்ற போட்டியில் வெற்றி பெற்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கேப்டன்சியை வெளிப்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை