இந்த மாதிரி கேப்டன்சி பண்ண பிளே ஆஃப் கூட போக முடியாது – ஹர்திக் பாண்டியவை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொஞ்சம் கஷ்ட காலம் தான். அதவாது கடந்த ஆண்டுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்த வருடம் ஹர்திக் பாண்டியா கே

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொஞ்சம் கஷ்ட காலம் தான். அதவாது கடந்த ஆண்டுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்த வருடம் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்க படத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இதே நடப்பதாக ரசிகர்கள் சிலர் பேசிக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகள் விளையாடிய நிலையில் அதில் ஐந்து போட்டிகளில் தோல்வியும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றியும் அடைந்துள்ளது. மேலும் நெட் ரன் ரெட் என்பது – 0.227 என்று பாதாளத்தில் இருக்க இந்த முறை பிளே ஆஃப் செல்வது கடினமாகியுள்ளது. இந்நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி.

அவர் கூறுகையில் : இந்த மாதிரியான கேப்டன்சி தொடர்ந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப்களுக்குச் செல்ல முடியாமல் போகும். முன்பு, வீரர்கள் ரோஹித் ஷர்மாவுடன் இருந்தனர். இப்போது மும்பை வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை அணியின் கேப்டனாக வாங்கவில்லை என்பது போல் தெரிகிறது.

ஹர்திக் பாண்டியா உள்ளே வந்ததும், அவர் 2 பவுண்டரிகளுக்கு அடித்தார். அது புதிய பந்தில் இருந்து பிரகாசத்தை சிறிது எடுத்துச் சென்றது, மேலும் ஸ்விங்கின் தன்மை என்பது குறைந்தது. இதனால் பேட்டிங் செய்ய எளிதாக்கியவிட்டது. இந்த முட்டாள்தனமான தவறுகள் செய்யப்படுவதால், புள்ளிகள் அட்டவணையில் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறுவதை நான் காணவில்லை என்றார் திவாரி

இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் 7வது இடத்தில் இருக்கும் மும்பை அணி வரும் அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். குறிப்பாக இன்னும் மீதம் இருக்கும் போட்டிகளில் மும்பை அணி வெற்றியடையும் பட்சத்தில் பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் இதற்கு மேலே இருக்கும் அணிகளும் பிளே ஆஃப் இடத்திற்கு போட்டிபோடும் என்பதினால் சுவாரசியம் கூடியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை