8 சிக்ஸர்கள் 4 ஃபோர்கள். அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், மும்பைக்கு 178 ரன்கள் இலக்கு.
ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இவ்விரு அணிகளுக்கும் இப்போட்டியையும் மற்றும் இனி வரும் போட்டியையும் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப்பிற்கு தகுதி பெற வ
ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இவ்விரு அணிகளுக்கும் இப்போட்டியையும் மற்றும் இனி வரும் போட்டியையும் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப்பிற்கு தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி களம் கண்ட லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தன. அணியின் தொடக்க வீரர் ஹூடா 5 ரன்களில் வெளியேற ப்ரிராக் மன்கட்த் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 16 ரன்களில் அவுட்டாகி வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.
அதன் பிறகு இணைந்த ஸ்டானிஸ் மற்றும் க்ருனால் பாண்டியா நிதானமாகவே விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ருனால் பாண்டியாவும் ரிடேர்ட் அவுட் ஆகி வெளியேறினார். அற்புதமாக விளையாடி அணியின் ஸ்கோரை மட மடவென உயர்த்தி வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் LBW அவுட் என நினைத்த நிலையில் ஆட்டமிழக்காமல் மீண்டும் விளையாடவந்த ஸ்டோய்னிஸ் அதற்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடினார். ஸ்டானிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். மேலும் இந்த ஆட்டத்தில் 6 சிக்ஸர்கள் 4 ஃபோர்கள் என அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ்47 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். ஆனால் எப்போதும் அதிரடி ஆட்டத்தை காட்டும் பூரான் இன்று பொறுமையாக ஆடினார்.
மேலும் லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா ஆரம்பத்தில் சொதப்பினாலும் தற்போது பிரமாதமாக ஸ்டானிஸ் உடன் இணைத்து நன்றாக ஸ்கோரை உயர்த்தினர்கள் 20 வது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது. ஸ்டானிஸ் மட்டுமே 47 பந்துகளில் 89 ரன்களை குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை கொடுத்தார்.