எல்லாம் திடீரென நடந்து விட்டது – ஹைதராபாத்தின் வெற்றிக்கு பிறகு ஏய்டன் மார்க்ரம் கொடுத்த பேட்டி.

ஐபிஎல் 2023 தொடரின் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய RR அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் தனத

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய RR அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் தனது மோசமான பார்மை விட்டுவிட்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி அவுட் ஆனார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரால் இந்த சீசனில் இதுவரை பேட் மூலம் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் அவரது பேட்டிங்கில் அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க முடிந்தது. இந்நிலையில் 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். ஆனால் பவர்பிளேக்குப் பிறகு பொறுமையாக விளையாடிய சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார்.

அதே நேரத்தில் பிரமாதமாக ஆடிய ஜோஸ் பட்லர் விரைவாக பேட்டிங் செய்து 59 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.இந்நிலையில் 215 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்படும் என்ற நிலையில் சமத் ஆட்டமிழந்தாலும் அது நோ பாலாக இருந்த்தால் அடுத்த பந்திலேயே சமத்ஸ் சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

மார்க்ரம் கூறியது :

எல்லாம் திடீரென மாறிவிட்டது. 215 ரன்களை துரத்துவது என்பது எளிதான காரியம் கிடையாது. எங்ககளுடைய அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு பெரிய இலக்கை துரத்துவதற்கு பங்களித்தனர். வேகமாக அவுட்ஃபீல்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்கோர் எடுப்போம் என்று எங்களுக்குத் தெரியும் ஆனாலும். நாங்கள் பந்துகளை அடித்து ஆட வேண்டிய சூழ்நிலை இருந்தது.

அபிஷேக் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார். பின்னர் திரிபாதி அவருக்கு உறுதுணையாக இருந்து ரன்களை குவித்தார். பின்னர் பிலிப்ஸ் மற்றும் கிளாசியின் அதிரடியாக ஆடினார்கள். சமத்தின் ஃபினிஷிங் திறமையைப் பற்றி பேசுகையில் “நீங்கள் ஆட்டத்தை முடிக்கும் நோக்கில் விளையாடுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களை அந்த அழுத்தத்திற்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும். அங்குதான் போட்டியின் சூட்சமம் சூட்சமம் இருக்கிறது என்று கூறினார் ஹைதராபாத் கேப்டன் மார்க்ரம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை