வீடியோ : மும்பை பேட்ஸ்மேன்களை கதறவிட்ட சென்னை அணியின் குட்டி மலிங்கா பதிரனா.

ஐபிஎல் 2023 லீக்கில் 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னையில் உள்ள எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் 1 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. மற்றொரு புறம் மும்பை அண

By ·

ஐபிஎல் 2023 லீக்கில் 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னையில் உள்ள எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் 1 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. மற்றொரு புறம் மும்பை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் விளையாடிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் கிரீன் மற்றும் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டதை கொடுக்க நினைத்தனர், ஆனால் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர்க்கு பின்னரே இஷான் கிஷனும் 7 ரன்களில் வெளியேற, அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.

அதற்க்கு பிறகு சூர்ய குமார் யாதவ் மற்றும் வதேரா இணைந்து வலுவான கூட்டணி அமைத்து 55 ரன்களை குவித்து வந்த நிலையில் சூர்யகுமார் 26 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த வதேரா ரன்களை குவித்து அணிக்கு நம்பிக்கையை சேர்த்தது மட்டுமல்லாமல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின் பதிரனா வீசிய பந்தலில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

டிம் டேவிட் 2 ரன்களிலும், அர்ஷாத் கான் 1 ரன்களில் வெளியேறினார். சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தனர். ஸ்டப்ஸ் 20 ரன்களில் வெளியேற இறுதியில் மும்பை 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் சென்னை அணியின் பதிரான 4 ஓவரில் 1 பவுண்டரி கூட கொடுக்காமல் வெறும் 15 ரன்கள் மட்டும் குறைவான எக்கனாமியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக 13வது ஓவரில் 5 ரன்களும் 15வது ஓவரில் 7 ரன்களும் 18வது ஓவரில் வெறும் 2 ரன்களும் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து டெத் ஓவர்களில் அசத்தினார். இந்நிலையில் இவரின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர் மலிங்காவை போல வரும் காலத்தில் கண்டிப்பாக அசத்துவார் பதிவிட்டு வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை