ஒருநாள் போட்டியில் அறிமுகமான முதல் நாளே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பதிரான – அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
ஐபிஎல் 2023 தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதல் அற்புதமாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல் போட்டியில் மோதியது. இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து மழையால் போட்டி 15 ஓவர்கள
ஐபிஎல் 2023 தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதல் அற்புதமாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல் போட்டியில் மோதியது. இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் சென்னை அணியின் ஜடேஜா கடைசி 2 பந்தில் 10 ரன்களை விளாசி வெற்றியை சென்னை அணிக்கு தேடி கொடுத்தார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு அணியின் அனைவருமே ஒரு காரணமாக இருந்தார்கள். அந்த வகையில் குறை வேண்டும் என்றால் மதிஷா பதிரானவை கூறலாம். இலங்கை அணியை சேர்ந்த மதிஷா பதிரானவை தோனியே ஐபிஎல் போட்டிக்கு முன்னர் சென்னை அணியில் சேர்த்து விட்டார். இந்நிலையில் இந்த சீசன் விளையாடிய புதிரான சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இப்படிப்பட்ட நிலையில் தான் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடங்குகிறது. மூன்று நாட்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டியில் மதிஷா புதிரான முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கு இலங்கை அணியில் அறிமுகமாக்கினார். ஏற்கனவே டி20 தொடரில் விளையாடிய நிலையில் ஒருநாள் போட்டியிலும் இணைந்தார் பதிரான. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் டாஸை வென்ற ஆப்கானித்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி பேட்டிங் செய்ய வந்தது. ஆனால் 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையால் இலங்கை அணி பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைக்க வேண்டியிருந்தது. 268 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானித்தான் அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
இந்த இக்கட்டான நிலையில் பந்துவீசிய பதிரான முதல் 4ஓவர்களில் 33 ரன்களை வாரி வழங்கினார். மேலும் முதல் 3 ஓவர்களிலேயே 7 வைடுகளை வீசினார். அதில் ஓன்று பவுண்டரி சென்றது. இது ஒரு சிறப்பான தொடக்கமே கிடையாது. பதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் சென்னை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். ஆனால் அவருடைய ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இருதியில் பதிரான 8.5 ஓவர்களை வீசி 66 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இருந்த போதிலும் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 46.5 ஓவர்களில் 19 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் வெற்றி பெற்றது. இது இலங்கை அணிக்கு ஒரு மோசமான தொடக்கம் என்றாலும் அடித்த இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது.