இலங்கையிலும் தோனியின் புகழ் பாடும் மதீஷா பதிரனா – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மும்பைய அணியின் சாதனையை சமன் செய்தது. அந்த வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம் என்றார்கள் ஜடேஜா தான். அவர் தான் கட்சி 2 பந்தில் 10 ரன்களை விளாசி வெற்றி பெற்று கொடுத்தார். ஓய்வு பெற

By ·

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மும்பைய அணியின் சாதனையை சமன் செய்தது. அந்த வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம் என்றார்கள் ஜடேஜா தான். அவர் தான் கட்சி 2 பந்தில் 10 ரன்களை விளாசி வெற்றி பெற்று கொடுத்தார். ஓய்வு பெற்ற ராயுடு வரை அனைவரும் அந்த போட்டியில் முக்கிய பங்காற்றியதை போலவே மதிசா பதிரனா சிறப்பாக செயல்பட்டார்.

இலங்கையைச் சேர்ந்த அவர் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் ஸ்லிங்கா பந்துவீச்சை போல ஆர் அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆரம்பத்தில் நெட் பவுலராக வந்த அவர் பின்னர் 2022 சீசனில் சில போட்கள் விளையாட, இவரின் திறமையை புரிந்து கொண்ட தோனி 2023 ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கொடுத்தார்.

மேலும் 12 போட்டிகள் விளையாடியுள்ள தோனி 19 விக்கெட்டுகளை 8.01 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார். அதனால் சாதாரணமாகவே யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்டாத தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் அவரை பல தருணங்களில் பாராட்டினார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் தோனி தற்போது LPL போட்டியில் கொழும்பு அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அப்போது பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில் “ஒரு இளம் வீரருக்கு அவரைப் போன்ற ஒருவர் தன்னம்பிக்கை கொடுப்பது உங்களுடைய கேரியரில் மிகப்பெரிய உத்வேகமாகம். அவர் எனக்கு ஆதரவு கொடுத்து என்னால் இந்த அளவில் சாதிக்க முடியும் என்று நம்பினார். எனக்கு மட்டுமல்லாமல் தோனி அனைவருக்குமே தன்னம்பிக்கையை கொடுக்கிறார். சென்னை அணியில் 4 – 5 டாப் வீரர்கள் காயத்தை சந்தித்திருந்த போது அவர் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை காட்டியது மிகவும் சிறந்ததாகும்.

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். முதலில் அழுத்தில் அமைதியாக இருப்பது. அதன் காரணம் தான் அவர் வெற்றிகரமாக இருக்கிறார். அதே போல 42 வயதிலும் ஃபிட்டான வீரராக இருக்கும் அவர் அனைவருக்கும் உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார். சென்னை அணியில் நான் இருந்த போது குழந்தையாக இருந்தேன். யாருக்கும் என்னை பற்றி அதிகம் தெரியாது. இருந்த போதிலும் எனக்கு பயிற்சிகளை அவர்கள் கொடுத்து நிறையவற்றை கற்றுக் கொடுத்தனர்.

அதனால் இப்போது அணைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் என்னுடைய 4 ஓவர்களை வீசி சமமாக எப்படி செயல்பட முடியும் என்பதை நான் கற்றுள்ளேன். மேலும் நான் காயங்களை சந்திக்காமல் இருந்தால் என்னுடைய அணிக்காகவும் நாட்டுக்காகவும் நிறைய வெற்றிகளை சாதிக்க முடியும் என்று தோனி சொன்னார் என்று கூறினார் மதீஷா புதிரான. இந்நிலையில் தற்போது நடந்துவரும் இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் கொழும்பு அணிக்காக விளையாடி வரும் அவர் 8 போட்டிகள் விளையாடி 12 விக்கெட்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை