எப்போது விழுவோம் என்று ஆஸ்திரேலியா காத்துக்கொண்டிருக்கிறது – கடுமையாக விமர்சித்த மேத்யூ ஹைடன்.

உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின

By ·

உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் இன்று சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வென்று தீர வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது.

அதில் டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்க 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் களை இழந்து 311 ரன்களை குவித்தது. 312 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பம் சொதப்பலாக அமைய 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஆஸ்திரேலிய அணியின் இரண்டவாது தொடர் தோல்வியாகும்.

நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி தழுவியதால் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்த தொடர் தோல்வியினால் ஆஸ்திரேலிய அணியானது அரையிறுதி போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஏனென்றால் அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராரான மேத்யூ ஹைடன் கடுமையான விமர்சங்களை வைத்துள்ளார்.

பத்து ஓவர்களுக்குள் நீங்கள் ஒரு ஆஃப் ஸ்பின்னர் பந்துவீச்சைச் செய்தீர்கள், எந்த ஸ்லிப்பும் இல்லாமல் சரியாக நாங்கள் எப்படி ஒரு விக்கெட்டைப் பெறப் போகிறோம் என்று ஒரு நனவான திட்டம் இல்லை. நான் நினைக்கும் போதெல்லாம் ஷேன் வார்னே நினைவுக்கு வருகிறார். அவர் முதலில் சொல்லும் விஷயம் என்னவென்றால், உடனடியாக, நான் எப்படி விக்கெட்டைப் பெற முயற்சிக்கிறேன் என்பதுதான்.

அப்படி இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை நான் உணர்கிறேன். பந்துவீச்சை போல பேட்டிங்கிலும் அது நடக்கவில்லை என்பதை உணர்கிறேன். இவர்கள் வீழ்த்தப்படுவதற்கு காத்திருக்கிறார்கள், அவர்கள் சுட்டு முதல் மற்றும் இரண்டாவது விக்கெட்டுகளுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அதற்கு பிறகு ஒரு சிறிய பாட்னர்ஷிப் வந்தாலும் மூன்றாவது மற்றும் நான்காவது விக்கெட்டுகளுக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

அதற்கு பிறகு மீண்டும் ஒரு பாட்னர்ஷிப். அந்த நேரத்தில் லாபுஸ்கேன் மற்றும் ஸ்டார்க் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். இருப்பினும், சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இப்போது அவர்கள் எப்படி நினைக்கத் தொடங்குகிறார்கள் என்றால். சரி ரன்களைப் பெறப் போகிறோம் என்பதற்கு மாறாக, சரி நாங்கள் தப்பி பிழைக்க போகிறோம் என்பதுதான். அதுதான் அன்றைய டிரெண்டிங் கதை என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார் மேத்யூ ஹைடன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை