இத செய்யலனா விராட் கோலிக்கு என் அணியில் இடமில்லை – மேத்யூ ஹைடன் விளக்கம்.
ஐபிஎல் போட்டியானது முடிவடைந்த நிலையில் தற்போது 2024 டி20 உலக கோப்பை போட்டியானது தொடங்கி இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் பயிற்சி போட்டியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி போட்டியில் இந்திய அவ்வளவு சரியாக பேட்டிங் செய்தது போல் தெரியவில்லை. இருந்த போதிலும் பங்கள
ஐபிஎல் போட்டியானது முடிவடைந்த நிலையில் தற்போது 2024 டி20 உலக கோப்பை போட்டியானது தொடங்கி இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் பயிற்சி போட்டியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி போட்டியில் இந்திய அவ்வளவு சரியாக பேட்டிங் செய்தது போல் தெரியவில்லை. இருந்த போதிலும் பங்களாதேஷ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக சஞ்சு சாம்சன் சொற்பப் ரன்களில் ஆட்டமிழந்தது வெளியேறினார். இந்நிலையில் இதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் விராட் கோலி இந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாட வில்லை.
விராட் கோலி கடந்த ஐபிஎல் சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை வென்றார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்குவார்கள் போல தெரிகிறது. இந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன்.
அவர் கூறியதாவது : உங்களது அணியில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை பேட்ஸ்மேன் என கலவையாக வீரர்களை கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு வரிசையில் ஐந்து வலது கை வீரர்களை வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் ஆஸ்திரேலியா ஜம்பாவுக்கு வணக்கம் சொல்லும். இந்திய அணியை பொறுத்தவரையில் கோலி ஓபன் செய்ய வேண்டும் அல்லது அவர் எனது அணியில் விளையாட மாட்டார்.
அவர் தற்போது மிகவும் சிறப்பான வடிவத்தில் இருக்கிறார். ரோஹித் எந்த இடத்திலும் விளையாட கூடிய ஒரு பல்துறை வீரர் மற்றும் அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வெட்கப்படுவதில்லை. டி20 கிரிக்கெட்டில் அவர் நம்பர் 4 இல் வெற்றிகரமான சாதனை படைத்துள்ளார. மேலும் மிடில் ஆர்டரில் களமிறங்கினாள் அங்கிருந்து பேட்டிங் குழுவை வழிநடத்த முடியும் என்றார் மேத்யூ ஹைடன்.
டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :
ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்