இது வெறும் ஆரம்பம் தான்…இந்திய அணிக்கு விளையாடுவது தான் என்னோட டார்கெட் – வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 15-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதனத்த
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 15-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதனத்தில் மோதியது. பெங்களூரு அணி இதற்க்கு முன்பு நடந்த 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்து இதற்கு முன்பு நடந்த போட்டியில் கொல்கத்தா இடம் தோல்வியை தழுவி இருந்தது அதேபோலத்தான் இந்த போட்டியிலும் பெங்களூரு அணி சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது ஆரம்பத்தில் அவர்களுக்கு கை கொடுத்த நிலையிலும் அதன் பின் லக்னோ அணியின் மிடில் ஆர்டரில் வந்த நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை நான்கு பக்கமும் சிதறடித்து இருந்தனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்திருந்தார். அவர் 56 பந்துகளில் 81 ரன்களை அவர் அடித்து இருந்தார்.
அதேபோல் மிடில் ஆர்டரில் வந்த பூரானும் 21 பந்தில் 46 ரன்களை அவர் அடித்து இருந்ததார். அதில் ஒரு பவுண்டரியும் ஐந்து சிக்சர்களையும் அவர் அடித்து தனது ஆட்டத்தை நிரூபித்திருந்தார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களை குவித்து இருந்தனர். அதன் பின் 182 ரன்கள் இலைக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணி அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனும் விராட் கோலியும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்க தவறவிட்டனர்.
பெங்களூரு அணியின் வீரர்கள் வழக்கம் போல் மிடில் ஆர்டரில் சொதப்பி போட்டியில் தோல்வியை தழுவியது. இதில் தொடக்க வீரரான விராட் கோலி 22 ரன்களில் இருந்த போது தமிழகத்தை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் ஐபிஎல்லில் முதல் விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். பெங்களூரு அணியின் லோம்ரோர் மட்டுமே மிடில் ஆர்டரில் சற்று சிறப்பாக விளையாடி இருந்தார். அவரும் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் அவர் 3 பவுண்டரிகளும் 3 சிக்சர்களையும் அவர் அடித்து இருந்தார்.
எனவே பெங்களூரு அணி 28 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி சொந்த மைதானத்தில் 2வது தோல்வியும் இந்த சீசனில் 3வது தோல்வியையும் தழுவியது. அது மட்டுமல்லாமல் இந்த ஐபிஎல் தொடரில் ஆல் அவுட்டான முதல் அணியாகவும் பெங்களூரு அணி இருந்து வருகிறது. கடந்த காலங்களில் எவ்வாறு ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பி அணி இருந்ததோ அதே போல் தான் இந்த தொடரையும் பெங்களூரு அணி தொடங்கி உள்ளது. போட்டியில் 150+ KMPH வேகத்தில் வீசி எதிராணி வீரர்கள் சிதைக்க வைத்த மயங்க் யாதவ் கூறுகையில்,
இந்த பந்துவீச்சு பற்றி நான் நன்றாக உணர்கிறேன், இரண்டு போட்டிகளில் இரண்டு ஆட்டநாயகன் விருதுகள். இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்காக விளையாடுவதே எனது இலக்கு. இது வெறும் ஆரம்பம் என்று உணர்கிறேன். கேமரூன் கிரீனின் விக்கெட்டை நான் மிகவும் ரசித்தேன். விரைவாக பந்து வீசுவதற்கு நிறைய காரணிகள் உள்ளன – உணவு, தூக்கம், பயிற்சி. நான் எனது உணவு மற்றும் மீட்பு – ஐஸ் பாத் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறேன் என்றும் அவர் கூறினார்