IPL 2023 தான் எம்.எஸ் தோனிக்கு கடைசி சீசனா? ரூமார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சஹ்ரமா கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்த

By ·

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சஹ்ரமா கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் IPL 2023 கோலாகலமாக தொடங்க இருக்கிறது. IPL 2023 தொடக்க போட்டியில் “சென்னை சூப்பர் கிங்ஸ்” மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே போட்டியானது நடைபெற உள்ளது.

ஐபிஎல் 2023 நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் அணைத்து ஐபிஎல் அணிகளுக்கும் தங்களுடைய வீரர்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்த சீசன் எப்படியாவது IPL கோப்பையை வென்று விடவேண்டும் என்று பல விதமான திட்டங்களை ஒவ்வொரு அணி நிர்வாகமும் தீவிரமாக செய்து வருகிறது. அவைகளில் சிஎஸ்கே அணியும் தங்களை முதல் போட்டிக்கும் தீவிரமாக தயார்ப்படுத்தி வருகின்றனர்.

IPLலில் இருந்து ஓய்வு :

இந்நிலையில் சமீப காலமாகவே மஹேந்திர சிங் தோனியின் கடைசி IPL சீசனாகவும் இந்த 2023 IPL சீசன் இருக்கலாம் என்று பல விதமாக தகவல்கள் சோசியல் மீடியாவை வந்த வன்னமாக இருக்கிறது. ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தோனியோ அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் உறுதியாக வர வில்லை. இந்நிலையில் தோனியின் இந்த சீசன் IPL போட்டிகள் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு பெரிய விஷயத்தை கூறியுள்ளார்.

தோனி ஓய்வு குறித்து ரோஹித் சர்மா :

அதாவது சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மும்மை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதை தோனியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, ஏனெனில் அவர் டீம் இந்தியாவிலிருந்து ஓய்வு பெறும் போது, ​​சக வீரர்களுக்கு கூட அது தெரியாது. கடந்த 2-3 ஆண்டுகளாக தோனியின் கடைசி ஆண்டாக இந்த சீசன் இருக்கும் என்று நான் கேள்விப்பட்டு வருகிறேன். ஆனால் அவர் இன்னும் சில சீசன்களுக்கு விளையாடும் அளவுக்கு தகுதியானவர் என்று நினைக்கிறேன்” என்றார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த 3 IPL சீசன்கள் :

இப்படியொரு நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.எஸ் தோனி சென்னைக்கு திரும்ப இருக்கிறார். ஏனென்றால் கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் ஆட்டிப்படைத்தது. இந்த நிகழ்வால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டன. 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் மட்டுமே நடத்தப்பட்டது.

IPLலும் தோனியும் :

இதனால் இந்த சீசன் எம்.எஸ் தோனி தன்னுடை அணியின் சொந்த இடமான சேப்பாக்கத்தில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளார். சொல்லப்போனால் தோனியின் வாழ்க்கையில் ஐபிஎல் என்பது மறுக்க முடியாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சுமார் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் 39.20 சராசரி மற்றும் 135.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 4978 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 24 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை