தடுமாறும் ஆர்ச்சர், அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஐபிஎல் சீசனிலாவது களமிறங்குவாரா? மும்பை அணி செய்திருக்கும் மாற்றம்.
ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்த
ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை எதிகொள்ள இருப்பதினால் எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த இரு அணிகளுக்குமான போட்டி எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படுவதற்கு காரணம் ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான கடுமையான மோதலை இது குறிக்கும். என்னதான் இரண்டு போட்டிகளும் இந்தியாவில், வீரர்களுக்கு இடையே நடந்தாலும் சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டி ஐபிஎல் தொடங்கியது முதலே இருந்து வருகிறது.குய்ப்பிடத்தக்கவகையில் சொல்ல வேண்டும்.
ஏனெற்றால் ஐபிஎல் தொடரில் மொத்தம் சென்னை மற்றும் மும்பை 36 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளுமே மிகவும் மோசமாக ஆடியது. கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு பெரிய ஸ்கோர் தேவைப்படுகிறது, ஏனெனில் கடந்த சில சீசன்களில் இவரது பேட்டிங் அந்த அளவிற்கு சரியாக இல்லை. அதேபோல அவருடன் இணைத்து விளையாடும் தொடக்க வீரர் இஷான் கிஷான் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததற்கு பிறகு பெரிதாக எதையும் செய்யவில்லை.
இதனால் இந்த ஐபிஎல் தொடரில் முதல் மூன்று இடங்களில் உள்ள பேட்ஸ்மேன்கள் தங்களின் திறமைகளை காட்டவேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்இந்த நிலையில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் இளம் மிடில் ஆர்டர்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இம்பாக்ட் பிளேயர் விதியால், மும்பை ஒரு கூடுதல் பேட்டிங்கை விளையாட முடியும். ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது, இருப்பினும் பயிற்சியாளர் பொல்லார்ட் அவர் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆர்ச்சர் ஒருவேளை காயமடைந்தால் வலது கை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அணிக்கு வரலாம். அது மும்பைக்கு ஒரு கூடுதல் பந்துவீச்சாளராக இருக்கும். அதே சமயம் அர்ஜுன் டெண்டுல்கரும் அணியில் இருக்கிறார். அவர் வலது கை சீமர் மூன்று சீசன்களாக மும்பை அணியில் இருந்து வருகிறார். ஆனால் இன்னமும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. MI பார்க்கும் ஒரே மாற்றமாக இருப்பது இடது கை சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா. மேலும் ஹிருத்திக் ஷோக்கீனுக்குப் பதிலாக பியூஷ் சாவ்லா தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.