அதிரடியாக ஆடிய ஹைதராபாத், கடைசி ஓவர்களில் அடக்கிய மும்பை – வெற்றிபெற 200 ரன்கள் இலக்கு.

இந்த நிலையில் தான் ஐபிஎல் 2023 க்கான 68வது லீக்கில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. மும்பை அணி ப்ளே ஆப்பிற்க்கு தகுதி பெற இப்போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இருந்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்ட

By ·

இந்த நிலையில் தான் ஐபிஎல் 2023 க்கான 68வது லீக்கில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. மும்பை அணி ப்ளே ஆப்பிற்க்கு தகுதி பெற இப்போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இருந்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் ப்ளே ஆப் ரேசில் இருந்து வெளியேறி விட்டது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் விக்ராந்த் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி வந்தனர். அதன் பிறகு அதிரடி காட்ட தொடங்கினார். மும்பை அணி பௌலிங்கை அனைத்து பக்கங்களிலும் சிதறடித்து வந்தனர். விவ்ராந்த் அதிரடியாக விளையாடி தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை குவித்து வந்தனர்.

மும்பை அணியின் பௌலர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் அவரும் அவருடைய அரை சதத்தை பூர்த்தி செய்ய மும்பை அணி தடுமாறி வந்தது. அதிரடியாக விளையாடி வந்த விவ்ராந்த் 69 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் பிலிப்ஸ் அவர் 1 ரன்னிலே வெளியேற ஹைதராபாத் அணி சற்று தடுமாறி வந்தது. கிளாசென் 18 ரன்களிலும் மற்றும் ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 200 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி. ஒருகட்டத்தில் 220 ரன்கள் வரும் என்ற நிலையில் மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சினால் 200 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணியால் எடுக்க முடிந்தது.

200 ரன்கள் எடுத்த போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியினர் அவர்களுடைய மைத்தனத்தில் சிறந்த விளையாட்டை காட்டியுள்ளார். மேலும் மும்பை அணியில் பல சூப்பர் ஹீட்டர்கள் இருப்பதினால் கண்டிப்பாக இந்த ரன்களை மும்பை எடுத்துவிடும் என்று ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆனால் மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்ததாக ஆற்சிபி இன்று இரவு நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றது என்றால் மும்பை அணி பிளே ஆஃப் செல்வது கொஞ்சம் கடினம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை